– கருஞ்சட்டை –
போலி வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு கல்வி கற்க என்ற போர்வையில் பாஜக நகர்மன்றத் தலைவரின் மகன் இளைஞர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளார். ஆனால், ரஷ்யாவில் வேலைக்கு எடுத்த அந்த நபர்கள் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து கட்டாயமாக ரஷ்ய- உக்ரைன் போரில் ஈடுபட வைத்துள்ளனர். இதில் இரண்டு இந்திய இளைஞர்கள் கடந்த வாரம் உக்ரைன் ராணுவத்தால் சுடப்பட்டு உயிரிழந்தனர்.,
இந்த நிலையில், இந்தியர்களைப் போருக்கு அனுப்பியது தொடர்பாக விசாரணை நடத்தியதில் அவர்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் பாஜக நகர்மன்ற உறுப்பினர் ஒருவரின் மகன்மூலம் ”பல்கலைக் கழகத்தில் மேற்கல்வி கற்க” என்ற பெயரில் விசா வாங்கி, அந்த விசாவில் அவர்கள் ரஷ்யா சென்றுள்ளனர். அங்கு அவர்களை வேலைக்கு எடுத்த அங்குள்ள முகவர்கள், அவர்களுக்கு வேலை தராமல் முதலில் ஆயுதப் பயிற்சி கொடுத்து உக்ரைனோடு போர் புரிய அனுப்பியது தெரியவந்தது.,
இந்த மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிபிஅய், சுயேஸ் முகுந்த் என்ற நபர்மீது வழக்குப் பதிவு செய்தது. அதில் அவர் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தியதும், சட்டவிரோதமாக இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியதும் தெரியவந்தது. உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டு உயிரிழந்த இந்தியர்கள் சுயேஸ் முகுந் மூலமாகவே ரஷ்யா சென்றுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட சுயேஸ் முகுந்த்தின் தாயார் அனிதா முகுந்த், மத்தியப்பிரதேசத்தின் தார் நகர நகராட்சி மன்றத்தில் பாஜக சார்பில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
இந்தப் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் தார்மிகம்பற்றி எல்லாம் உரக்கவே பேசுவார்கள். ஒழுக்கத்திற்கும், நாணயத்திற்கும் ஒட்டு உறவு இல்லாத – மதவாலைப் பிடித்துத் தொங்கும் இந்தக் கூட்டம், பிள்ளை பிடிக்கும் கூட்டம் போன்றது. மதப் போதையை ஏற்றி, பார்ப்பனீயத்திற்குச் சேவை செய்யும் அடியாட்களாகவும் பயன்படுத்திக் கொள்ளும், எச்சரிக்கை!
No comments:
Post a Comment