மயிலாடுதுறை நகராட்சி தியாகி நாராயணசாமி மேல்நிலைப் பள்ளி மய்ய மண்டபத்தில் பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் படங்கள் புதுப்பிப்பு! - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 17, 2024

மயிலாடுதுறை நகராட்சி தியாகி நாராயணசாமி மேல்நிலைப் பள்ளி மய்ய மண்டபத்தில் பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் படங்கள் புதுப்பிப்பு!

21-7

மயிலாடுதுறை, மார்ச் 17- மயிலாடுதுறை நகராட்சி தியாகி நாராயணசாமி மேல்நிலைப் பள்ளியில் தந்தை பெரியார் அவர்க ளுடைய படத்தை தமி ழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், கலைஞர் அவர்களுடைய படத்தை கல்வி அமைச் சர் பேராசிரியர் க.அன் பழகன் அவர்களும், பேராசிரியர் அவர்களு டைய படத்தை உள்ளாட் சித்துறை அமைச்சர் கோ.சி.மணி அவர்களும் பல்வேறு காலகட்டங் களில் திறந்து வைத்துள்ள னர்.
சுமார் அரை நூற் றாண்டுக்கும் மேலாக இந்த படங்கள் மய்ய மண்டபத்தை அலங்க ரித்து வந்தன. அவை சற்று பழுதடைந்த நிலை யில் புதுப்பிக்கக் கோரி திராவிடர் கழகம் உள் ளிட்ட பல்வேறு அமைப் புகள் சார்பில் நகர்மன்ற தலைவர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேற்படி படங்கள் தற்போது புதுப்பிக்கப் பட்டு திமுக மாவட்டச் செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் 14.3.2024 அன்று திறந்து வைக்கப் பட்டது.

இந்நிகழ்வில் நகர் மன்ற தலைவர் க.செல் வராஜ், துணைத்தலைவர் எஸ்.எஸ்.குமார், உறுப் பி னர் சர்வோ.பாலாஜி, பள் ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப் பித்தனர்.

No comments:

Post a Comment