
அன்னை மணியம்மையார் அவர்களின் 105 ஆவது பிறந்த நாள் விழா தமிழ்நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது! தஞ்சையில் உள்ள பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தோழர்கள் புடைசூழ அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவித்துச் சிறப்பு செய்தார்கள்.
தொடர்ந்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை முன், அன்னை மணியம்மையார் அவர்களின் படம் வைத்துத் தோழர்கள் சிறப்பு செய்தனர்!
அதுசமயம் இயக்கத் தோழர்கள் பலர் பங்கேற்றாலும், எப்போதும் நம்முடன் இருக்கும் இனவுணர்வாளர் தஞ்சை விசிறி சாமியார் கலந்து கொண்டார். இதுதவிர கழுத்தில் உத்திராட்சம் அணிந்து, நெற்றியில் சந்தனம் இட்டு ஒருவரும், மற்றொரு ஆன்மீகவாதியான நண்பர் ஒருவரும் சாலையில் சென்றவர்களும் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர்!
தோழர்கள் முழக்கத்திற்கு பதில் முழக்கமிட்டு குழுப்படத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்கள் மூவரையும் மட்டும் நாம் தனிப்படம் எடுத்தோம்!
அவர்களிடம் பேசிய போது, “பெரியார் எங்கள் தலைவர்” என்றார்கள். ஆக கருப்புச் சட்டைக்கு மட்டுமல்ல, எல்லா நிறச் சட்டைகளுக்கும் சொந்தக்காரர் பெரியார்! அதனால் தான் இது அவரது மண்!
தகவல்: வி.சி.வில்வம்
No comments:
Post a Comment