குடியாத்தம், மார்ச் 18- வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 10.3.2024 அன்று காலை 10.30 மணியளவில் அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குடி யாத்தம் ஒன்றிய பெரும்பாடி கிராமத்தில் வேலூர் மாவட்ட மகளிரணி மகளிர் பாசறை மற்றும் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் குடும்ப விழா நடைபெற்றது.
10.03.2024 அன்று காலை 9.00 மணிக்கு குடியாத்தம் நகரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கும் அன்னை மணியம்மையார் உருவப் படத்திற்கும் வேலூர் மாவட்ட மகளிரணி சார்பில் மாலை அணி விக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட காப்பாளர் ச.ஈஸ்வரி, மாவட்ட மகளிரணி ந.தேன் மொழி, மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார், மாவட்ட காப்பாளர் வி.சட கோபன், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இர.அன்பர சன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச்செயலாளர் பெ.தன பால், குடியாத்தம் நகர தலைவர் சி.சாந்தகுமார், நகர அமைப்பாளர் வி.மோகன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
காலை 10.30 மணியளவில் குடியாத்தம் ஒன்றியம் பெரும்பாடி கிராமத்தில் உள்ள தோழர் பால் காரர் பாண்டு அவர்களின் தென் னந்தோப்பில் சிறப்பாக நடை பெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட காப்பாளர் ச.ஈஸ்வரி அவர்கள் தலைமை வகித்தார், மாவட்ட மகளிரணி ந.தேன்மொழி அனை வரையும் வரவேற்றார், மாவட்ட மகளிரணி செயலாளர் ச.இரம்யா, மாவட்ட மகளிர்பாசறை தலைவர் சி.லதா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இர.அன்பர சன், மாவட்ட ப.க அமைப்பாளர் வே.வினாயகமூர்த்தி, மாவட்ட ப.க துணைத் தலைவர் க.சையத் அலீம் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத் தனர்.
இந்நிகழ்வில் 60 தோழர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள். மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் துணைத் தலைவர் திருப் பத்தூர் ம.கவிதா, ஓசூர் மாவட்ட மகளிரணி தலைவர் செ.செல்வி, பொதுக்குழு உறுப்பினர் அ.செ. செல்வம், ஆகியோர் சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டனர்.
கழகத் தோழர்கள் குடும்பமாக கலந்து கொண்டார்கள், கழகத் தோழர்களின் உறவினர்கள் மற் றும் நண்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பு செய்தனர். 50ஆம் ஆண்டு இணை யேற்பு விழாவை கொண்டாடும் பெரியார் பெருந்தொண்டர்கள் வி.சடகோபன், ச.ஈஸ்வரி ஆகி யோருக்கு நிகழ்வில் சிறப்பு செய்யப்பட்டது.
மதுரை நட்பு தமிழ் வட்டம் சார்பில் ஆளுமை மகளிர் வருது பெற்ற வேலூர் மகளிரணி ந.தேன் மொழிக்கு சிறப்பு செய்யப்பட்டது. கழக மகளிர் தோழர்கள் தாங்கள் பெரியார் கொள்கை ஏற்றுக் கொண்டு, சிறப்பான வாழ்க்கை வாழ்வதை பற்றியும், அன்னை மணியம்மையார் அவர்களின் உறு தியான செயல் பாடுகளைப் பற்றி யும் வந்திருந்த மகளிர் தோழர் களிடம் பறிமாறிக் கொண்டார்கள்.
இந்நிகழ்வில் புதிய மகளிர் தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள். ஒருவரோடு ஒரு வர் மனம் விட்டு பேசி மகிழ்ந் தார்கள். வந்திருந்த தோழர்கள் ஒவ்வொரு ஆண்டும் அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாளில் குடும்பவிழா நடத்தும்படி வேண்டுகோள் வைத்தார்கள்.
இயற்கை சுற்றப்புற சூழலில் தென்னந்தோப்பில் நடந்த குடும்ப விழா நிகழ்வு, கலந்து கொண்ட அனைவரும் மகிழ்ச்சியோடும் நிறை வோடும் உற்சாகமாக கழித்தனர். பெரியார் பிஞ்சுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கலந்துகொண்டோர்
இந்நிகழ்வில் மாவட்ட தலை வர் வி.இ.சிவக்குமார், மாவட்ட ப.க தலைவர் மருத்துவர் பழ.ஜெகன் பாபு, வேலூர் மாநகர தலைவர் ந.சந்திரசேகரன், மாநகர செய லாளர் அ.மொ.வீரமணி, குடியாத் தம் நகர தலைவர் ச.சாந்தகுமார், நகர அமைப்பாளர் வி.மோகன், குடியாத்தம் திராவிட மகளிர் பாசறை தலைவர் எ.இராஜகுமாரி, மாநகர மகளிரணி தலைவர் வீ.பொன் மொழி, மாநகர மகளிரணி த.தெய் வானை, மாவட்ட இளைஞரணி தலைவர் பொ.தயாளன், மாவட்ட இளைஞரணி செயலாளர் இ.தமிழ் தரணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.சீனிவாசன், குடி யாத்தம் இளைஞரணி மோ.எழி லரசன், குடியாத்தம் திராவிடர் கழகம் க.பரமசிவம், மாவட்ட மாணவரணி தலைவர் இர.க.இனி யன், மாவட்ட இளைஞரணி வி.சி.சங்கநிதி, இ,வெண்மதி,
கோ.தமிழ்ச்செல்வி, ச.ரேவதி,
ப.ஜீவானந்தம், ஆ.நிர்மலா, அம்மு, நபீஸா, அ.விமலா, சா.அறிவசரன், ஆ.இராகவன், இரா.மகாலட்சுமி, கோ.கார்த்திகேயன், கா.தருனிகா, ந.பொற்ச்செழியன், ந.கலையரசன், ம.இலாவண்யா, பெரியார் பிஞ்சுகள் இரா.திலோத்தமா, இரா.பூர்னிமா, இரா.எ.பொற்ச்செழி யன், அயான் கபீர், இஃப்பா சனம், கபீர், வே.வி.யோகசரன், வே.வி.மகி ழினி, ரே.தி.மகிழன், ரே.தி.நிலன், கா.குறளினியாழன் மற்றும் கிராம பகுதி தோழர்கள் கலந்து கொண் டனர்.
No comments:
Post a Comment