
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (13.03.2024) கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 560 கோடியே 5 இலட்சம் ரூபாய் செலவில் 273 நிறைவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 489 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு, பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ வேலு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி துறை அமைச்சர் சு. முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, பி.ஆர். நடராசன், கே. சண்முகசுந்தரம், அந்தியூர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, அய்.ஏ.எஸ். உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மாண்புமிகு மருத்துவம்மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் மருத்துவத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment