காஞ்சிபுரத்தில் சாவித்திரி பாய் பூலே, டாக்டர் முத்துலட்சுமி, அன்னை மணியம்மையார் தொண்டுகளுக்குப் புகழாரம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 17, 2024

காஞ்சிபுரத்தில் சாவித்திரி பாய் பூலே, டாக்டர் முத்துலட்சுமி, அன்னை மணியம்மையார் தொண்டுகளுக்குப் புகழாரம்!

featured image

காஞ்சிபுரம், மார்ச் 17– காஞ்சிபுரம் – வையாவூர் சாலை, எச். எஸ் அவென்யூ பூங்காவில், 10.3.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில், காஞ்சி தமிழ் மன்றத்தின் மகளிர்நாள் விழா கொண்டாடப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில், மூன் றாம் வகுப்பு மாணவி கிருத்திகா 50 திருக்குறள் கூறி அனைவரின் பாராட்டுதலையும் பெற்றார்.
அன்னை மணியம்மையா ரின் 105ஆவது பிறந்தநாளில் அவர் படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செய்யப்பட் டது.
மகளிர் புடைசூழ இனிப்பப் பம் (கேக்) வெட்டி அனைவ ருக்கும் வழங்கப்பட்டது.
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தே.நாகராஜன் விழாவிற்குத் தலைமை வகித்து, மகளிர் நாள் விழாவைப் பற்றி யும் பெண் ஆளுமைகள் குறித்த உரையரங்கம், பாட்டரங்கம் நடைபெற இருப்பதையும் எடுத்துக் கூறினார்.

ஆசிரியர் சு. அமுதா, பா. ஜெயந்தி, பா. துர்கா தேவி, ஜி. அம்சா, பார்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் ஆ. விஜயா, மருத் துவர் க. அன்புச்செல்வி, செவிலியர் பா. வெண்மணி ஆகியோ ருக்கு பயனாடை அணிவித்து தந்தை பெரியாரின், பெண் ஏன் அடிமையானாள்?, இனி வரும் உலகம், பெரியார் பொன் மொழிகள் முதலிய நூல்கள் பரிசளிக்கப்பட்டு பாராட்டப் பட்டனர்.
ஒருங்கிணைந்த அண்ணா நகர் குடியிருப்போர் சங்கத் தலைவர் மோ. பாஸ்கரன் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து மகளிர்நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பாட்டரங்கில், பாவலர் மு.சு. நரேந்திரன், பாவலர் மு. தேவேந்திரன் ஆகியோர் மகளிர் குறித்த சிறப்பான பாக் களை இயற்றிப்பாடி பாராட் டுப் பெற்றனர்.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான அன்னை முத்து லட்சுமி அவர்களின் கல்வி, வாழ்க்கை, மருத்துவப் பணி, சட்டமன்ற சமுதாயப் பணிகள் குறித்தும் அக்கால நிலையில் அவர் போராடிய விதங்கள் குறித்தும் மருத்துவர் க. அன்புச் செல்வி சிறப்பாக உரையாற் றினார்.
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே அவர்களின் கல்வி, அவர் எதிர் கொண்ட இன்னல்கள், பெண் களுக்காகப் பல பள்ளிகளை உருவாக்கிய தொண்டு, மகா ராட்டிரா மாநிலத்தில் அக் காலத்தில் பெண் கல்வி வளர்ச் சிக்காக பாடுபட்ட மகாத்மா ஜோதிராவ் புலே அவர்களின் தொண்டு ஆகியவற்றை மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டி ஆசிரியர் ர. உஷா உரையாற்றி னார்.

‘இராவண லீலா’ நடத்தி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த பகுத்தறிவு இயக்கத்தின் முதல் பெண் தலைவரான அன்னை மணியம் மையார், தந்தை பெரியாரைக் காத்த அன்னையாக வாழ்ந்த தொண்டு, அவருடைய கல்வி, மணியம்மையார் குறித்து புரட் சிக் கவிஞர், அறிஞர் அண்ணா ஆகியோரின் பாராட்டுகள் முதலியவை குறித்து காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.வெ. முரளி சிறப்பாக உரையாற்றினார்.

சங்க காலப் பெண்பாற் புல வர்கள், சங்க காலத்தில் உயர்ந் தோர்க்கு மட்டுமே கல்வி இருந்த நிலையிலும் கற்றுயர்ந்த பெண்பாற் புலவர்கள், காதல், வீரம், கொடை, மானம் குறித்து பாடிய பாடல்கள் குறித்தும் அனைவருக்குமான கல்வி இல்லாத நிலை இருந்ததையும் கற்றோரில் பெண்கள் விகிதம் மிக மிகக் குறைவாக இருந்த தையும், இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் கூட பெண் கல்வி மிக மிகக் குறைவாக இருந் ததையும் , தந்தை பெரியாரின் உழைப்பு, திராவிட இயக்கங்க ளின் செயல்பாடுகளால் தமிழ் நாட்டில் பெண் கல்வி விகிதம் அதிகரித்து இன்று பெண்கள் எல்லா நிலையிலும் உயர்ந்தி ருக்கின்ற நிலையையும் சுட்டிக் காட்டி, காஞ்சி தமிழ்மன்றத் தின் அமைப்பாளர் முனைவர் பா. கதிரவன் உரையாற்றினார்.

வழக்குரைஞர் ஜி. கோதண் டராமன், பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பெ. சின்னத் தம்பி, அருள், வே. கிள்ளிவள வன், எ. கிருஷ்ணன், ராமதாஸ், செந்தில்குமார், சந்திரசேகர், சேகர் உள்ளிட்ட பொதுமக்கள் விழாவில் பங்கேற்றனர்.

விழா சிறப்பாக நடைபெற ஆசிரியர் புகழேந்தி, சிறீராம் சப்ளையர்ஸ் டில்லி, பாவலர் நரேந்திரன் முதலியோர் ஒத்து ழைத்தனர்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இயக்க நூல் கள் வழங்கப்பட்டு 8.00 மணி யளவில் நன்றிகூற விழா நிறை வடைந்தது.

No comments:

Post a Comment