குலசையில் இருந்து ராக்கெட்டை விண்ணிற்கு செலுத்துவது மிகச் சுலபம் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 1, 2024

குலசையில் இருந்து ராக்கெட்டை விண்ணிற்கு செலுத்துவது மிகச் சுலபம் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி

தூத்துக்குடி,மார்ச்.1- குலசேகரப் பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ள நிலை யில், அதற்கு முன்னோட்டமாக குலசேகரப்பட்டினத்திலிருந்து ரோகிணி எனும் சிறிய வகை ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டிருக்கிறது. இந்த நிலையில், திருச் செந்தூரிலிருந்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் தளம் அமைப்பதற்கான நிலத்தை தமிழ்நாடு அரசு இஸ்ரோவிடம் ஒப் படைத்துவிட்டது. 2 ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும். இந்தியாவின் 2ஆவது ராக் கெட் ஏவு தளமாக குலசேகரப்பட்டினம் உள் ளது. குலசேகரப்பட்டினத்திலிருந்து ராக்கெட்டை விண்ணிற்கு செலுத்துவது மிகச் சுலபம். ரூ.1,000 கோடி மதிப்பிலான பணிகள் விரைவில் முடியும் என நம்பு கிறேன்.
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவு தளத்தின் மூலம் நேரம், பொருளாதாரம் போன்றவை சேமிப்பாகிறது. ஆண்டுக்கு 24 சிறிய ராக்கெட்டுகளை ஏவும் வகையில் தளம் அமைக்கப்படும்.
சிறீஅரிகோட்டாவை விட குல சேக ரப்பட்டினத்திலிருந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு 10இல் ஒரு பங்கு செலவே ஆகிறது என்றார்.

No comments:

Post a Comment