பாங்க் ஆஃப் இந்தியாவிடம் கடன் வாங்கி வெளிநாடு தப்பிய நீரவ் மோடி 80 லட்சம் டாலர் கொடுக்க வேண்டும் லண்டன் உயர்நீதிமன்றம் ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 12, 2024

பாங்க் ஆஃப் இந்தியாவிடம் கடன் வாங்கி வெளிநாடு தப்பிய நீரவ் மோடி 80 லட்சம் டாலர் கொடுக்க வேண்டும் லண்டன் உயர்நீதிமன்றம் ஆணை

லண்டன், பிப்.12 வைர வியாபாரி நீரவ் மோடி, பாங்க் ஆஃப் இந்தியா வங்கியிடம் 80 லட்சம் டாலர் ஒப்படைக்கும்படி லண்டன் உயர் நீதிமன்றம் நேற்று (10.3.2024) உத்தரவிட்டது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய ரூ.13,500 கோடி கடனை வைர வியாபாரி நீரவ் மோடி திருப்பிச் செலுத்தாமல் 2018இ-ல் லண்டன் தப்பிச் சென் றார். இதையடுத்து, அவர் மீது சிபிஅய், அமலாக்கத் துறை வழக் குப் பதிவு செய்தன. லண்டனில் நடைபெற்ற நீதிமன்ற விசார ணைக்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாக நீரவ் மோடி சிறை தண்டனை அனுபவித்து வரு கிறார். தற்போது அவர் லண்டனில் உள்ள தேம்ஸைட் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

முன்னதாக, துபாயில் உள்ள தனக்கு சொந்தமான ஃபயர் ஸ்டார் வைர டைமண்ட் நிறுவ னத்துக்காக பாங்க் ஆஃப் இந்தியா வங்கியிடம் 90 லட்சம் டாலர் கடனாக நீரவ் மோடி பெற்றிருந் தார். அதனையும் 2018-ஆம் ஆண்டில் செலுத்துவதாக அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றாமல் வங்கியை ஏமாற்றிவிட்டார்.

இந்நிலையில், லண்டன் உயர் நீதிமன்றத்தில் பாங்க் ஆஃப் இந்தியா மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், நீரவ் மோடிக்கு சொந்தமான ஃபயர் ஸ்டார் வைர டைமண்ட் துபாய் நிறுவனத்தின் மூலமாக தங்களுக்கு சேர வேண் டிய 80 லட்சம் டாலர்களை மீட் டுத்தரும்படி கோரிக்கை வைத்தது.

இந்த மனுவை விசாரித்த லண்டன் உயர் நீதிமன்றம் நீரவ் மோடிக்கு சொந்தமான எந்த வொரு நிறுவனத்தையும் ஏலம் விட்டு அல்லது விற்று தங்களுக்குச் சேர வேண்டிய தொகையை பாங்க் ஆஃப் இந்தியா வங்கி மீட்டுக் கொள்ளலாம் என்று உத்தரவிட் டுள்ளது.

No comments:

Post a Comment