போதை தடுப்பில் தமிழ்நாடு அரசு தீவிரம் தாய்லாந்தில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ. 50 லட்சம் கஞ்சா பறிமுதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 12, 2024

போதை தடுப்பில் தமிழ்நாடு அரசு தீவிரம் தாய்லாந்தில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ. 50 லட்சம் கஞ்சா பறிமுதல்

மூன்று பேர் கைது

சென்னை, மார்ச் 12- தாய் லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்து விற்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது தொடர் பாக 3 பேரை கைது செய்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கல்லூரி மாணவர் கள் மற்றும் மென் பொறியாளர் களை குறிவைத்து கஞ்சா. கொக் கைன் உள்ளிட்ட போதை பொருட் கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த தகவலையடுத்து தனிப்படை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட் டனர்.

அப்போது ஓ.ஜி. என்ற உயர் ரக கஞ்சா விற்பனையில் ஈடுபட் டதாக மாங்காட்டை சேர்ந்த சண்முகராஜ் (வயது 65) என் பவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்பேரில் அவ ரது கூட்டாளிகளான இளை யான்குடியை சேர்ந்த யாசர் அராபத் (வயது 30), முகமது ஜைனுல் ரியாஸ் (வயது 30) ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில் சண்முகரா ஜின் மகன் கார்த்திக், அவரது நண்பர் இப்ராகிம் இருவரும் தாய்லாந்தில் தங்கி வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தாய்லாந்தில் இருந்து ஓ.ஜி. என்ற உயர்ரக கஞ்சாவை வாங்கி, தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வரும் பயணிகளிடம் மருத்துவப் பொருட்கள் என கூறி கொடுத்து அனுப்பி வைப்பார்கள்.
பின்னர் சண்முகராஜ் மற் றும் அவரது கூட்டாளிகள் விமான நிலையத்தில் அந்த பய ணிகளிடம் இருந்து கஞ்சாவை வாங்கி சென்று விற்று வந்துள் ளனர். சில நேரங்களில் யாசர் அராபத்தும் தாய்லாந்துக்கு சென்று கஞ்சாவை விமானத்தில் கடத்தி வந்து விற்றதும் விசார ணையில் தெரியவந்தது.

தாய்லாந்தில் ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் இந்த உயர்ரக கஞ்சாவை சென்னையில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விற் பனை செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
கைதான 3பேரிடம் இருந்தும் 1.51 கிலோ ஓ.ஜி. கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 3 பேரையும் அண்ணாநகர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். பறிமுதலான கஞ்சாவின் மதிப்பு ரூ.50லட்சம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், அண்ணாநகரில் செய்தி யாளர்களிடம் கூறும் போது, “தாய்லாந்தில் உள்ள சண்முக ராஜின் மகன் மற்றும் அவரது நண்பரிடமும் இது குறித்து விசாரணை செய்யப்பட உள்ளது” என்றார்.
இதேபோல் அம்பத்தூர் காவல் துறையினர் 10.3.2024 அன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது புதூர் பாபுநகர் அருகே உள்ள ஒரு மைதானத்தில் சந்தேகப் படும் படி காரில் இருந்த 2 பேரை மடக்கி சோதனை செய் தனர். அவர்களிடம் மெத்தபெட் டமைன் என்ற போதைப் பொருள் 200 கிராம் இருப்பது தெரியவந்தது.

காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில், அந்த போதைப்பொருளை பெங்களூ ருவில் கள்ளச்சந்தையில் வாங்கி வந்து அம்பத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் வடமாநிலத்தவர்களை குறிவைத்து விற்பனை செய்தது தெரிந்தது.
போதைப் பொருளை பறி முதல் செய்த காவல்துறையினர். இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த பாபு (25) மற்றும் ரமேஷ் (24) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறை யில் அடைத்தனர்.
பறிமுதலான போதைப் பொருளின் மதிப்பு ரூ.20 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment