ஜெய்ப்பூர், மார்ச் 8- நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தச் சுற்றுப்பயணத்தில் கட்சி பொதுக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார். அவ்வகையில், ராஜஸ் தானில் நேற்று (7-4-2024) பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, பன்ஸ்வாரா நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப் படும். இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படும். அரசு தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிவதை தடுப்பதற்கு உரிய சட்டம் இயற்றப்படும். விவசாயிகள் விளைவிக்கும் பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும். கிக் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Friday, March 8, 2024
Home
இந்தியா
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: ராகுல் காந்தி உறுதி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: ராகுல் காந்தி உறுதி
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment