விழுப்புரம்,மார்ச் 7- விழுப்புரம் மாவட்டம் கருவேப்பிலைபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராயலு (வயது 54) மிளகாய் வியாபாரி.
இவர் மனைவி குப்பம்மாள். இவர்களுக்கு சுகந்தி, சுகுணா,சுபி, அபி, அனிதா ஆகிய 5 மகள்கள் உள்ளனர். இவர்களில் கடைசி மகளான அனிதா, சரவணம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்- 2 படித்து வருகிறார்.
4.3.2024 அன்று காலை வழக்கம் போல் சைக்கிளில் வியா பாரத்துக்கு புறப்பட்டு சென்றார் சிறுத்தனூரில் சாலையை கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி வந்த கார், அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையறிந்த அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியது. மேலும் பிளஸ்-2 பொதுத் தேர்வில் ஆங்கில பாடத்துக்காக வீட்டில் படித்து கொண்டிருந்த அனிதா பெரும் அதிர்ச்சி அடைந்ததோடு, மிகுந்த மனவேதனையும் அடைந்தார்.
இதனிடையே முண்டியம்பாக் கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் பரி சோதனை முடித்து சுப்புராயலு வின் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
தேர்வு எழுதிய மாணவி
இந்த துக்கத்தையும் தாங்கிக் கொண்டு பிளஸ்-2 ஆங்கிலத் தேர்வு எழுத அனிதா முடிவு செய்தார். இதை தனது தாய் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தார்.
அவர்களும் மாணவியை தேற்றி, ஆசுவாசப்படுத்தி தேர்வு எழுத பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு வந்த அனிதா தனது தந்தைபின் உடலை கட்டிப்பிடித்து அழுதார்.
அதனை தொடர்ந்து சுப்பு ராயலுவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தந்தையின் கனவை நனவாக்க…
இதுகுறித்துமாணவி அனிதா கூறுகையில், எனது தந்தை சைக்கிள் மூலம் மிளகாய் வியா பாரம் செய்து என்னை படிக்க வைத்து வந்தார். எனது தாய் கூலி வேலை செய்து வருகிறார்.
நான் காவல் துறையில் சேர வேண்டும் என அடிக்கடி எனது தந்தை கூறிவந்தார். அவரின் கனவை நனவாக்க விரும்புகிறேன்.
தற்போது எனது தந்தை இறந்துவிட்டதால், நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம்.
மேலும் எனது படிப்பும் கேள்விக்குறியாகி உள்ளது என்றார்.
No comments:
Post a Comment