இதுதான் பிஜேபி ஆட்சியின் சாதனை உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கான இடம் 126-முதலிடம் பின்லாந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 22, 2024

இதுதான் பிஜேபி ஆட்சியின் சாதனை உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கான இடம் 126-முதலிடம் பின்லாந்து

ஒட்டாவா, மார்ச் 22- உலகின் மகிழ்ச்சி யான நாடுகள் பட்டியலில் பின் லாந்து, டென்மார்க், அய்ஸ்லாந்து நாடுகள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.
அய்.நா. ஆதரவுடன் ஆண்டு தோறும் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியிடப் படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் தனிநபர் வருவாய், சமூக ஆதரவு, சுகாதாரம் உட்பட பல்வேறு அம் சங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் நேற்று (20.3.2024) வெளி யிடப்பட்டது. இதை கனடா பொருளாதார நிபுணர் ஜான் எப் ஹெலிவெல், ரிச்சர்ட் லயார்ட், ஜெப்ரி சாக்ஸ், ஜேன் இமானுவேல் டி நெவி, லாரா பி அகினின் மற்றும் ஷன் வாங் ஆகியோர் வெளியிட்டனர்.

இந்தப் பட்டியலில் பின்லாந்து, டென்மார்க், அய்ஸ்லாந்து, சுவீடன், இஸ்ரேல் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள் ளன. மொத்தம் 143 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், தலி பான்கள் நிர்வாகத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் கடைசி இடத் தில் உள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் இந்தியா 126ஆ-வது இடத்தில் உள்ளது.
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் கடந்த 10 ஆண்டுகளாக வெளியிடப்படுகிறது. இதில் முதல் 20 இடங்களில் அமெரிக்காவும், ஜெர்மனியும் இடம்பெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அந்த இரண்டு நாடுகளும் முதல் 20 இடங்களில் இடம்பெறவில்லை. அமெரிக்கா 23-ஆவது இடத்திலும் ஜெர்மனி 24-ஆவது இடத்திலும் உள்ளன. கோஸ்டாரிகா (12), குவைத் (13) ஆகிய நாடுகள் முதல் 20 இடங்களுக்குள் இடம் பிடித்து உள்ளன.

No comments:

Post a Comment