ரயில்வே பயணத்தில் பயணிகளின் சராசரி கட்டணம் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 2013இல் 0.32 ரூபாயாக இருந்தது. மோடியின் ஆட்சியில் 2021-2022இல் இது 0.66 ரூபாயாக அதாவது 107 சதவீதம் உயர்ந்துள்ளது. இதையும் மோடி ஆட்சியின் வளர்ச்சி என சங்கிகள் வாந்தியெடுக்கக்கூடும்.
ஏழைகளுக்கு எதிரான மனநிலையுடன் கூடிய சீரழிவின் தசாப்தம் ரயில்வே துறையில் என்ன பாதிப்பை உண்டாக்கியுள்ளது என்பதை காங்கிரஸ் ஒரு விரிவான குறிப்பில் விளக்கி யுள்ளது.
1. டிக்கெட் வசூல் கொள்ளை
2. ஏழைகளுக்கு எதிரான உள்கட்டமைப்பு முன்னுரிமைகள்
3. பின்தங்கிய ரயில் வேகம்
4. பயணிகளின் பாதுகாப்பில் அக்கறையற்ற அணுகுமுறை
5. சீரழிந்து வரும் ரயில்வே நிதி
என அய்ந்து நிலைகளில் மக்களுக்கு எதிராக ரயில்வே துறை மோடி நிர்வாகத்தில் சீரழிந் துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
2013-2014இல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு ரயில் பயணிக்கான சராசரி கட்டணம் 32 பைசா. இது 2021-2022இல் மோடியின் ஆட்சியில் கிலோ மீட்டருக்கு 66 பைசாகவாக உயர்ந்தது, அதாவது 107 சதவீதம் அதிகரிப்பு. இது இந்திய ரயில்வேயால் தெரிவிக்கப்பட்ட உண்மை,
சேவைகள் காலப்போக்கில் விலை உயர்ந்து வருகின்றன, ஆனால் விலைகளைக் கட்டுப் படுத்தும் வாக்குறுதியின் பேரில் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திற்கு 107 சதவீத கட்டண உயர்வு என்பது ஒரு பொருட்டு அல்ல. 2003-2004 மற்றும் 2013-2014 க்கு இடையில், மன்மோகன் சிங் அரசின் கீழ், ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பயணியின் சராசரி கட்டணம் 33 சதவீதம் மட்டுமே அதிகரித்து ரூ.0.24இல் இருந்து ரூ.0.32 ஆக இருந்தது.
விமான பயணத்தைக் கூட ஏழைகள் பயணிக்கத்தக்க வகையில் குறைப்போம் என்று கூறிய மோடியின் ஆட்சியில், ரயில் பயணத்தைக் கூட ஏழைகளுக்கு எட்டாத அளவுக்கு மோடி தள்ளியுள்ளார்.
”வந்தே பாரத் ரயில்கள் ஏழைகளுக்கு எட்டா தவையாக ஆக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, சதாப்தியில் டில்லி-கான்பூர் பயணச்சீட்டின் விலை ரூ.840, வந்தே பாரத் பயணச்சீட்டின் விலை ரூ.1,195. மன்மோகன் சிங் ஆட்சியில் பயணச்சீட் விலை ரூ.450க்கும் குறைவாக இருந்தது. மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை ரத்து செய்ததன் மூலம் மோடி அரசு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3,700 கோடி சம்பாதித்துள்ளது. ரயில்வேக்கான அரசின் முன்னுரிமைப் பட்டி யலில் இருந்து ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் நலன்கள் தூக்கி எறியப்பட்டுள்ளது. ஏசி பெட்டிகளை அதிகரிக்க பொது பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. உண் மையில், இதுபோன்ற தவறான செயல்களை மறைக்கவே ரயில் பட்ஜெட் ரத்து செய்யப்பட்டது” என ரயில்வே துறை மக்களுக்கு எதிராக ஆகியுள்ளதை அடுக்கடுக்காக பட்டியலிட்டு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கட்டணம் வசூலிக்க பின்வரும் நான்கு யுக்திகள் பயன்படுத்தப்படுகின்றன
1. போலி சூப்பர்ஃபாஸ்ட் கூடுதல் கட்டணம்
2. மூத்த குடிமக்கள் சலுகைகள் திரும்பப் பெறப்பட்டது
3. மாறும் விலை மோசடி
4. ‘சிறப்பு’ ரயில்கள்’ என்று அழைக்கப்படும் ரயில்களின் நீண்ட நீட்டிப்புகள்
என இந்திய மக்களை மிரட்டி பணம் பறிக்க பல்வேறு வழிகளை மோடி கொண்டு வந்துள்ளார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் பேருந்துகளுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே கூட்டம் அலை மோதுவதற்கு, ரயில் கட்டணமும், குறைவான ரயில் போக்கு வரத்தும் ஒரு காரணம் என்பதையும் நாம் மறுக்க முடியாது.
No comments:
Post a Comment