உலக நாடுகளின் ஊழல் பட்டியலில்
இந்தியா 93 ஆம் இடம்!
வாஷிங்டன், பிப்.1 ‘ட்ரான்ஸ்பரன்சி இன்டர் நேஷனல்’ அமைப்பு வெளியிட்டுள்ள ஊழல் குறியீடு பட்டியலில் இந்தியா 93ஆவது இடத் தைப் பிடித்துள்ளது. ஆசிய மண்டலத்தில், சரா சரியை விட இந்தியா குறைவான மதிப்பெண்ணை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஊழல் குறியீடு பட்டியலை வெளியிடும். அதன்படி இந்தாண்டிற் கான பட்டியலை ‘ட்ரான்ஸ்பரன்சி இன்டர் நேஷனல்’ அமைப்பு வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கான இந்தப் பட்டியலில் மொத் தம் 180 நாடுகள் உள்ள நிலையில், அதில் இந்தியா 93 ஆவது இடத்தில் உள்ளது.
இந்தியா
மாலதீவுகள், கஜகஸ்தான் மற்றும் லெசோதோ ஆகிய நாடுகளுடன் இந்தியா தனது 93 ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது. முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டில், இதே பட்டியலில் இந்தியா 85 ஆவது இடத்தை மாலதீவுகள் உள்பட மற்ற அய்ந்து நாடுகளுடன் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் தரவரிசையில் பல இடங்கள் பின்னால் சென்று இருந்தாலும் கூட, அதன் மதிப்பெண்களில் முந்தைய ஆண்டை காட்டிலும் ஒரு புள்ளி மட்டுமே குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
‘ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ அமைப் பின் இந்த ஊழல் குறியீடு பட்டியலில் 180 நாடு களுக்கு மதிப்பெண் வழங்கப்படும். பொதுத் துறையில் ஊழல் அதிகமாக இருந்தால் ஜீரோ மதிப்பெண் வழங்கப்படும் நிலையில், ஊழல் இல் லாத நாடுகளுக்கு100 மதிப்பெண் வழங்கப்படும்.
முதலிடம் யாருக்கு!
இந்தப் பட்டியலில் 90 மதிப்பெண் பெற்று டென்மார்க் முதலிடத்தில் இருக்கிறது. தொடர்ந்து 6 ஆவது முறையாக டென்மார்க் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல பின்லாந்து 87 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து 85 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடத்திலும், உள்ளன. நார்வே மற்றும் சிங்கப்பூர் நாடுகள் முறையே 84 மற்றும் 83 மதிப்பெண் பெற்று 4 மற்றும் அய்ந்தாவது இடத்தில் உள்ளன. சுவீடன் (82), சுவிட்சர்லாந்து (82), நெதர்லாந்து (79), ஜெர்மனி (78) லக்சம்பேர்க் (78) என மதிப்பெண்கள் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
மேலும், அதிக ஊழல் கொண்ட நாடாகச் சோமாலியா இருக்கிறது. அந்த நாடு வெறும் 11 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளது. வெனி சுலா 2 ஆவது இடத்திலும், சிரியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. தெற்கு சூடான், ஏமன், வடகொரியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
குறைவு
இந்தியாவைப் பொறுத்தவரை 39 மதிப் பெண்கள் பெற்று 93 ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 6 ஆண்டு களில் 2018இல் இந்தியா அதிக பட்சமாக 41 மதிப்பெண்கள் பெற்று இருந்தது. அதன் பிறகு 2020 இல் அதன் மதிப் பெண்கள் 40ஆகக் குறைந்த நிலையில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு அதே மதிப்பெண்கள்தான் இருந்தது. இந்தச் சூழலில் தான் இப்போது இந்தி யாவின் மதிப்பெண் 38 ஆகக் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தப் பட்டியலில் பெரியளவில் மாற்றம் இல்லை என்றே ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ சுட்டிக்காட்டுகிறது. பன்னாட்டளவில் ஊழல் குறியீட்டு பட்டியல் தொடர்ச்சியாக 12ஆவது ஆண்டாக, 43 ஆகவே இருக்கிறது. மேலும், இந்தப் பட்டியலில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் 50-க்கும் கீழே மதிப்பெண் பெற்றுள்ளன.
இந்தியாவை உள்ளடக்கிய ஆசிய-பசிபிக் மண்டலத்தைப் பொறுத்தவரை அது தொடர்ச் சியாக அய்ந்து ஆண்டாகச் சராசரி மதிப் பெண்ணாக 45அய் மட்டுமே பெற்றுள்ளது. இந்தியாவின் மதிப்பெண் என்பது மண்டல சராசரியை விடக் குறைவாக உள்ளது குறிப் பிடத்தக்கது. ஆசிய பசிபிக் மண்டலத்தில் நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் டாப் இடங்களில் உள்ளன. நமது அண்டை நாடான பாகிஸ் தான் 29 புள்ளிகளுடன் 133ஆவது இடத்திலும், சீனா 42 ஆவது இடத் திலும் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment