கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 20, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

20.2.2024
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* சண்டிகார் மேயர் தேர்தல் தில்லுமுல்லு வழக்கில், வாக்குச்சீட்டை ஆராய உச்ச நீதிமன்றம் முடிவு.
* அய்ந்து வேளாண் பொருட்களை அய்ந்தாண்டு காலத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையில் வாங்கிடும் மோடி அரசின் யோசனை; விவசாய அமைப்புகள் நிராகரிப்பு. போராட்டம் தொடரும் என அறிவிப்பு.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 அளித்திடும் புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம் இனி அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் அளிக்கப்படும், தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*”பொறியியல் தலைசிறந்த படைப்பு” என்று பிரதமர் மோடியால் வர்ணிக்கப்பட்ட 1.3 கி.மீ. நீளமுள்ள பிரகதி மைதான சுரங்கப் பாதை திறக்கப்பட்ட இரண்டு ஆண்டு களுக்குள், கட்டமைப்பு விரிசல், நீர்த்தேக்கம் மற்றும் கசிவு ஆகியவற்றால் பாதிப்பு. “பயணிகளின் உயிருக்கு சாத்திய மான அச்சுறுத்தல்” என பொதுப்பணித் துறை எச்சரிக்கை.
தி டெலிகிராப்:
*’பாரத் மாதா கி ஜெய்’ மற்றும் ‘ஜெய் சிறீராம்’ என முழக்கமிடுவதில் மோடி அரசு உங்களை ஈடுபடுத்துகிறது. பாகிஸ்தானில் நடக்கும் பிரச்சினைகளையும், அமிதாப் பச்சன் மற்றும் அய்ஸ்வர்யா ராயின் நடனத்தையும் பார்த்து விட்டு, இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை மறந்து விடுங்கள் என்று உங்களை ஊக்குவிக்கிறார்கள்’ உங்கள் பிரச்சினையை நினையுங்கள் என்று பாபுகஞ்சில் நடந்த பேரணியில் ராகுல் பேச்சு.
* 2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, பிப்ரவரி 25 அன்று பிரதமர் மோடி அய்ந்து எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார். ஏற்கெனவே 2021 இல் இருந்து வெளி நோயாளிகள் பிரிவு இயங்கும் மேற்கு வங்கத்தில் உள்ள எய்ம்ஸ் கல்யாணி மருத்துவமனையும் தற்போது 2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி திறந்திட உள்ளதாக மோடி அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* நடிகரும், பின்னர் பாஜகவில் இணைந்த மேனாள் அதிமுக எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர், ஆறு ஆண்டு களுக்கு முன்பு பெண் பத்திரிக்கையாளருக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசியதாக சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, அவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
* மோடி டபிள் என்ஜின் சர்க்கார் மாடல்: உ.பி காவல் துறையில் 60,244 கான்ஸ்டபிள் பணிகளுக்கு 50 லட்சத் திற்கும் அதிகமான இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தி இந்து:
* மோடி அரசின் பத்தாண்டு ஆட்சியின் தோல்விகளை மறைக்க, பாஜக ஆவேசமான பிரச்சாரத்தை செய்கிறது என்கிறது தலையங்கச் செய்தி.
– குடந்தை கருணா

No comments:

Post a Comment