தாய் வீட்டிற்கு வந்திருக்கக்கூடிய உணர்வோடு இந்த மேடையில், இந்த மாநாட்டில் நான் பங்கேற்றிருக்கின்றேன்.
தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் என்பார் கலைஞர்! தலைவர் கலைஞர் அவர்கள், எப்போதுமே திரா விடர் கழகம் என்று சொல்லமாட்டார். தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் என்று அடிக்கடி அல்ல; தொடர்ந்து எடுத்துச் சொல்வார்.
அதனைப் பின்பற்றித்தான் தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் அழைத்தவுடனே, ஆசிரியர் அவர்கள் எந்தச் சூழ்நிலையில் எந்தப் பணிகள் இருந்தாலும் இந்த மாநாட்டிற்கு வந்தே தீர வேண்டும் என்று அன்பு அழைப்பாக அல்ல; அன்புக் கட்டளையாக எனக்கு வழங்கி அந்தக் கட்டளையை நானும் சிரமேல் ஏற்றுக் கொண்டு இந்த மாநாட்டில் பங்கேற்க வந்திருக்கின்றேன்.
தாய் என்றால் – உயிர் கொடுத்தவள்; உணர்வைக் கொடுத்தவள், தாய் என்றால் நம்மை வளர்த்தவள், ஏன் வழிகாட்டக் கூடியவள். ஆமாம் திராவிடர் கழகம் தான்! திராவிட உணர்வுக்கு உயிர் கொடுத்திருக்கிறது.
திராவிடர் கழகம்தான் திராவிட இயக்கத்திற்கு உணர்வைக் கொடுத்திருக்கிறது, திராவிட உணர்வை வளர்த்தெடுத்து, வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. நேற் றைக்கும் வழிகாட்டியது, இன்றைக்கும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறது, நாளைக்கும் அது தான் வழிகாட்டப் போகிறது.
(தஞ்சாவூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் 24.2.2019 அன்று நடைபெற்ற சமூகநீதி மாநாட்டில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை)
No comments:
Post a Comment