உத்தரப்பிரதேசத்தில் பிஜேபி ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டரை லட்சம் வாக்குகளை இழக்கும்: அகிலேஷ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 26, 2024

உத்தரப்பிரதேசத்தில் பிஜேபி ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டரை லட்சம் வாக்குகளை இழக்கும்: அகிலேஷ்

featured image

லக்னோ, பிப்.26- உத்தரப்பிரதேசத்தில் காவல் துறை தேர்வு ரத்து செய்யப்பட்ட தன் எதி ரொலியாக பா.ஜனதா ஒவ்வொரு தொகு தியிலும் இரண்டரை லட்சம் வாக்குகளை இழக்கும் என அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள காவல்துறை பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 17, 18 ஆகிய நாள்களில் நடந்தது. மாநிலம் முழுவதும் சுமார் 48 லட்சம்பேர் இந்ததேர்வை எழுதினர். இந்த சூழலில் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது.இதைதொடர்ந்து தேர்வு எழுதிய இளைஞர்கள் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர் போராட்டம் காரணமாக காவல் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தி மோசடி யில் ஈடுபட்ட நபர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் நேற்று முன்தினம் (24.2.2024) அறிவித்தார்.

இரண்டரை லட்சம் வாக்குகளை இழக்கும்!
இந்த நிலையில் தலைநகர் லக்னோவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பத்திரி கையாளர்களை சந்தித்த சமாஜ்வாடி கட்சி தலைவரும், மேனாள் முதலமைச்சரு மான அகிலேஷ் காவல்துறை தேர்வு விவ காரத்தில் பாரதீய ஜனதா அரசை கடுமையாக சாடினார்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:-
தேர்வு ரத்து என்பது முக்கிய செய்தியாக இருக்கலாம். இதனால் உத்தரப்பிரதேசத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டரை லட் சத்துக்கும் அதிகமான வாக்குகளை இழக்கும் என்பது பாரதீய ஜனதாவுக்கு அதிர்ச்சியான செய்தியாகும்.
பல ஆண்டுகளாக காவல்துறை ஆட் சேர்ப்புக்காக காத்திருந்த இளைஞர்கள் பாரதீய ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவார்கள்.
கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள பிரி ஜேஷ் பால் (வயது 28) என்ற இளைஞர் தனது கல்விச் சான்றிதழ்கள் அனைத்தையும் எரித்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கேள்விப்படும்போது துக்கம் அதிகரிக்கிறது. வேலை வழங்க முடி யாத இந்த மாதிரியான அரசாங்கத்தைப் பற்றி சிந்தியுங்கள். இறந்தவரின் குடும்பத்துக்கு, அரசு ரூ.1 கோடி நிதி உதவி வழங்க வேண்டும்.
-இவ்வாறு அகிலேஷ் கூறினார்.

No comments:

Post a Comment