தொழிலாளர்களை தேடி மருத்துவத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு பொது சுகாதாரத்துறை தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 27, 2024

தொழிலாளர்களை தேடி மருத்துவத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு பொது சுகாதாரத்துறை தகவல்

featured image

சென்னை, பிப். 27- தொழிலாளர்களைத் தேடி மருத்துவ திட்டம் நல்ல வரவேற்பை பெற் றுள்ளது என்று பொது சுகாதாரத் துறை இயக் குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமணப்பள்ளி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் என்கிற திட்டத்தை முதலமைச் சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2021ஆ-ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
இல்லங்களுக்கே சென்று மருத்துவ சேவை கள் வழங்கப்பட்டு வருவ தால், கோடிக்கணக்கான மக்கள் பயன்பெற்று வரு கின்றனர்.
இத்திட்டம் மக்களி டம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தொழிலாளர்களைத் தேடி மருத்துவத் திட்டம் கடந்த மாதம் தொடங் கப்பட்டது. இதன்மூலம், மருத்துவ குழுவினர் தொழிற்சாலைகளுக்கே நேரடியாகச் சென்று, தொழிலாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்கின்றனர். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு போன்ற நோய் பாதிப்பு கண்டறியப்பட் டால், அவர்களுக்கு தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 35 லட்சத்துக்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் உள்ள நிலையில், முதல் கட்டமாக 6.30 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய திட்டமிடப் பட்டுள்ளது.
65,638 பேருக்கு பரி சோதனை செய்ததில், 4,544 பேருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத் தம் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பொது சுகா தாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும் போது, “பொதுமக்கள் தங்களுக்கு உள்ள நோய் பாதிப்பு குறித்து தெரியா மல் உள்ளனர். இதயம், சிறுநீரகம், பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு வகை யான பாதிப்புகளுக்கு அடித்தளமாக சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருக்கிறது. இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால், மற்ற நோய்களை தடுக்க முடியும்.
அதனால், தமிழ்நாட் டில் மக்களைத் தேடி மருத் துவம், தொழிலாளர்க ளைத் தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் மூல மாக அவர்கள் இருப்பிடங் கள், பணியாற்றும் இடங்க ளுக்குச் சென்று பரிசோ தனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் போலவே, தொழி லாளர்களைத் தேடி மருத் துவத் திட்டமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள் ளது” என்றார்.

No comments:

Post a Comment