சென்னை, பிப். 27- பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் 409ஆவது வார நிகழ்வாக சென்னை கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளை கழக அலுவலகத்தில் உலக தாய்மொழி (21.2.2024) நாளையொட்டி 25.2.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணிக்கு பாசறை ஒருங்கிணைப்பா ளர் இரா.கோபால் அழைப்பில் மேனாள் ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் சு.சிவ குமார் முன்னிலையில் செயலாளர் க.இளவரசன் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
சிறப்புக் கூட்டத்தில் மேனாள் நகர மன்ற உறுப்பினர் தேவேந்திர குமார் தாய் மொழியின் சிறப்பு குறித்து உரை யாற்றினார்.
நிகழ்வில் கருப்பசாமி, ஆறுமுகம், சுமதி மணி, ஹரிதாஸ், கெஜலட்சுமி, பிச்சை மணி, இதயநிலா, காமாட்சி, உதயசூரியா, சக்தி தாசன், தமிழ் மதி ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் பிஞ்சு பூம்பொழிலின் ஏழாவது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங் கினார்.
இறுதியில் வழக்குரை ஞர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார் .
Tuesday, February 27, 2024
உலகத் தாய்மொழி நாள் சிறப்புக் கூட்டம்
Tags
# கழகம்
திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
Labels:
கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment