முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கொக்கூர் கோவிந்தசாமிக்கு வீரவணக்கம் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 25, 2024

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கொக்கூர் கோவிந்தசாமிக்கு வீரவணக்கம்

33-2

பெரியார் பெருந்தொண்டரும், திராவிட இயக்க மூத்த முன்னோடியுமான மயிலாடு துறையை அடுத்த கொக்கூர் கோவிந்தசாமி (வயது 102) வயது மூப்பின் காரணமாக இன்று காலை (25.2.2024) மறைவுற்றார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறோம்.
அந்த பகுதியில் நீண்ட காலமாக இயக்கத்தை வளர்த்தெடுத்த பண்பாளர் – சுயமரியாதை இயக்க வீரர் ஆவார். குத்தாலத்தில் 22.8.2022 அன்று அவரின் நூற்றாண்டு விழாவில் நானும் பங்கேற்று மகிழ்ந்தேன்.

அவரை இழந்து வாடும் மகன்கள் இளங்கோவன், மணிவண்ணன், இளஞ்சேரன் மற்றும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 
25.2.2024

குறிப்பு: அவரது உடல் நாளை (26.2.2024) மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment