கன்னியாகுமரியில் பெரியார் புத்தகநிலையம் சார்பாக அனைத்து கிராமப்புறங்களிலும் பெரியார் நூல்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 24, 2024

கன்னியாகுமரியில் பெரியார் புத்தகநிலையம் சார்பாக அனைத்து கிராமப்புறங்களிலும் பெரியார் நூல்கள்

featured image

நாகர்கோயில், பிப். 24- தந்தை பெரியா ருடைய கருத்துகளை அனைத்து மக்களுக்கும் எடுத்துக்கூறும் வகை யில் நாகர்கோவில் பெரியார் புத் தக நிலையம் சார்பாக கன்னியா குமரியில் அனைத்து கிராமப்புறங் களிலும் பெரியார் நூல்கள் திட் டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.பாபு ஆலோசனை வழங்கினார். அதன் பெயரில், தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஞாலம், தடிக்காரங்கோணம் ஊராட்சிகள், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றி யம் தேரேகால்புதூர் ஊராட்சி, திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் குமரன்குடி, கண்ணனூர், அருவிக் கரை ஊராட்சிகள் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் தூத்தூர், மங்காடு, சூழால், மெதுகும்மல் ஊராட்சிகளிலும் தந்தை பெரியா ருடைய நூல்கள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், இராஜாக்கமங் கலம் ஊராட்சி ஒன்றியம் பள்ளம் துறை ஊராட்சி மன்றத்தில் நாகர்கோவில் பெரியார் புத்தக நிலைய பொறுப்பாளர்
கோ.வெற்றிவேந்தன் ஊராட்சி மன்ற தலைவர் பி. ஆன்டனி அவர்களை சந்தித்து பெரியார் நூல்களை வழங்கினார். தொடர்ந்து அனைத்து கிரா மங்களிலும் பெரியாருடைய நூல்கள் பரப்புரை பணி நடை பெற்று வருகிறது.

No comments:

Post a Comment