26.2.2024
டெக்கான் கிரானிக்கல்,சென்னை
திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியின் திறமையான திட்டங்களால், உலக முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடுகளுக்கு முன் உரிமை தருகிறார்கள் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்
இந்தியா கூட்டணியின் பேரணி மார்ச் 3ஆம் தேதி பாட்னாவில் நடைபெறுகிறது. ராகுல், லாலு பிரசாத் பங்கேற்பு.
ராகுல் காந்தியின் இந்தியா நீதிப் பயணத்தில் அகிலேஷ் ஆக்ராவில் பங்கேற்பு. இந்தியா கூட்டணி பா.ஜ.க.வை வரும் பொதுத் தேர்தலில் தோற்கடிக்கும் என உறுதி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
‘மோடியின் உத்தரவாதம்’ என்ற முழக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, இது இந்திய ஜனநாயகம் சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்வதற்கான அறிகுறி என மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்.
கருநாடக அரசு அழைப்பின் பேரில், அரசியல் சட்டம் குறித்த கருத்தரங்கில் பேசுவதற்காக வருகை தந்த இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பேராசிரியை நிடாஷா கவுல், ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பாளர் என்ற காரணத்திற்காக பெங்களூரு விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, 72 மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டு, திருப்பி இங்கிலாந்திற்கே அனுப்பப்பட்டார்.
– குடந்தை கருணா
No comments:
Post a Comment