காண்டெர், பிப்.28 சத்தீஸ்கர் மாநிலத் தில் கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் நடை பெற்ற சட்டமன்ற தேர் தலில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக விஷ்ணு தேப் சாய் உள்ள நிலையில், 3 நாள்களுக்கு முன் காண்டெர் மாவட்டம் கோயலி பேடா பகுதியில் உள்ள ஹுர்தராய் வனப்பகுதியில் 3 நக்சலைட்டுகள் என் கவுண்டரில் கொல்லப்பட்டதாக காண்டெர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் கல்யாண் எலி செலா தகவல் தெரிவித்தார். ஆனால் 3 பேரின் உடல்கள் மறைமுக வைக் கப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், என்கவுண்டர் நடத்தப்பட்டு 2 நாள்களுக்குப் பின் னர் உயிரிழந்த 3 பேரின் குடும்பத் தினர் பிடிஅய் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தனர்.
இதில் “காவல்துறையினரின் என் கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 பேரும் நக்சலைட்டுகள் இல்லை. 3 பேரும் அப்பாவிகள். கோயலி பேடாவில் நிகழ்ந்த என்கவுண்டர் போலியானது. நக்சலைட்டுகளை ஒழிக்க முடியாமல் காவல்துறையினர் அப்பாவி மக்களை கொன்று வரு கின்றனர்” என கூறினர்.
காவல்துறை விளக்கம் எதுவும் அளிக்கவில்லை!
இந்தக் குற்றச்சாட்டுக்கு காண் டெர் மாவட்ட காவல்துறை மறுப்பு மட்டுமே தெரிவித்துள்ளது. மேற் கொண்டு விளக்கம் எதுவும் அளிக்க வில்லை.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 12 முதல் தற்போது வரை 3 மாதத்தில் நக்சலைட்டுகளின் அமைப்பைச் சேர்ந்த 14 பேர் என் கவுண்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட் டுள்ளதாக அம்மாநில பாஜக அரசு கூறி வருகிறது. 3 நாள்களுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வு போலி என்கவுண்டர் என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலை யில், ஏற்கெனவே சுட்டுக்கொல்லப் பட்ட மற்ற 11 பேர் நக்சலைட்டுகளா? இல்லை அப்பாவி பொதுமக்களா? என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.
நக்சல் தடுப்புப் படையினருக்கு ரகசியத் தகவல்!
பிஜாப்பூர் மாவட்டத்தில் ஜங்லா காவல் நிலையத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கியிருப்பதாக நக்சல் தடுப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததாகவும், காவல்துறையினர் அங்கு சென்றதும் நடைபெற்ற இருதரப்பு துப்பாக்கிச் சண்டையில் 4 நக்சலைட்கள் கொல்லப்பட்டதாக வும் பிஜாப்பூர் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment