ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் பெருந்தொண்டர்கள் சந்திப்பு - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 26, 2024

ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் பெருந்தொண்டர்கள் சந்திப்பு

6-48

ஆவடி,பிப்.26- ஆவடி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கழகத்தின் மூத்த முன்னோடிகள் பெரியார் பெருந்தொண்டர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்து அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் மேனாள் திராவிடர் கழக மாநில தொழிற்சங்க தலைவர் திருமுல்லைவாயில் ஆர்.‌திருநாவுக்கரசு அவர்களை 25-02-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 11-00 மணிக்கு திருமுல்லைவாயில் இல்லத்திலும், காளஞ்சிமேடு முரு கையன் அவர்களின் மகன் முகப் பேர் பொறியாளர் இளங்கோ மற்றும் அவரது வாழ்விணையர் ரஷ்யா அவர்களை 12:00 மணிக்கு முகப்பேர் இல்லத்திலும் கலெக் டர் நகர் பொறியாளர் சுந்தர் ராஜலு அவர்களை மதியம் 1-00 மணிக்கு அவரது இல்லத்திலும் சந்தித்து மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் பயனாடை அணிவித்து புத்தகங்கள் வழங்கி மகிழ்ந்தார்.

8-49-300x113 7-41-300x123

மாவட்ட கழகக் காப் பாளர் பா.தென்னரசு தலைமையில் மாவட்ட செயலாளர் க.இளவரசன் ஒருங்கிணைப்பில் மாவட்ட திரா விடர் கழக தொழிலாளர் அணி தலைவர் ஏழுமலை, துணைத் தலைவர் வை.கலையரசன், துணைச் செயலாளர்கள் உடுமலை வடிவேல், பூவை தமிழ்ச்செல்வன், ஆவடி நகர கழக தலைவர் முருகன், துணை தலைவர் சி.வச்சிரவேல், திருமுல்லைவாயில் பகுதி தலைவர் இரணியன்( எ) அருள் தாஸ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கார்த்திக்கேயன், அம்பத்தூர் அ.வெ.நடராசன், முகப்பேர் முரளி ஆகியோர் கலந்து கொண்டு பெரியார் பெருந் தொண்டர்களை சந்தித்து உற் சாகப்படுத்தினர்.

No comments:

Post a Comment