கருநாடக மாநிலத்தில் பெயர் பலகைகளில் கன்னடம் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை! - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 1, 2024

கருநாடக மாநிலத்தில் பெயர் பலகைகளில் கன்னடம் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை!

3

பெங்களூரு, பிப்.1- கருநாடக அரசுகடந்த 5ஆம் தேதி வணிக நிறுவனங்களின் பெயர் பலகை களில் 60 சதவீதம் கட்டாயம் கன் னடத்தில் எழுதி இருக்க வேண் டும் என அவசரச் சட்டம் கொண்டுவந்தது. மேலும், பிப்ரவரி 28‍ஆம் தேதிக்குள் கன்னடத்தில் பெயர் பலகை வைக்காத நிறு வனங்களுக்கு அபராதம் விதிக்கப் படும் எனவும் உத்தரவிட்டது. கருநாடக அரசு கொண்டு வந்த அவசரச் சட்ட மசோதாவுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப் புதல் பெறப்பட்ட‌து.

இந்த அவசர சட்டத்துக்கு ஒப் புதல் தராமல் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நிராகரித்துள்ளார். மேலும் இதை சட்டப் பேரவையில் நிறைவேற்றுமாறு திருப்பி அனுப் பியுள்ளார். இதற்கு காங்கிரசாரும், கன்னட அமைப்பினரும் கண் டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருநாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கூறுகையில், “கருநாடகாவின் முதன்மையான பிரச்சினையை புரிந்துக் கொள்ளாமல் ஆளுநர் தவறான முடிவை எடுத்துள்ளார். இந்தப் பிரச்சினை கருநாடகாவின் க‌வுரவம்சார்ந்தது என்பதால் ஆளுநர் தன‌து முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment