ஈரோடு, பிப்.26 வீடு புகுந்து தாழ்த்தப்பட்டவர்கள்மீது தாக் குதல் நடத்திய பாஜக கவுன் சிலருக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரி வித்துள்ளது.
இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமு வேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஈரோடு மாவட்டம், மொடக் குறிச்சி வட்டம், அரச்சலூர் பேரூராட்சி 6 ஆவது வார்டுக்கு உட்பட்ட குள்ளரங்கம்பாளை யம் காலனியில் கோகிலா, அவரது கணவர் சண்முகம், அவர்களின் மகன்கள் சதீஷ் குமார், ரமணிசந்திரன் ஆகி யோர் வசித்து வருகின்றனர். அவர்களின் வீட்டருகே கழிவு நீர் அடைத்துக் கொண்டது. எனவே அப்பகுதி கவுன்சிலர் கவின்குமார் அறி வித்துள்ள உதவி மய்ய எண்ணிற்கு ரமணிச் சந்திரன் அழைத்துள்ளார். அலை பேசியை எடுத்த கவுன் சிலரின் மனைவியிடம் பிரச் சினையை தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த கவுன்சிலருக்கு ஆத்திரம் வந் துள்ளது.
ஒரு தாழ்த்தப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்தவர் கழிவு நீர் அடைத்துக் கொண்டதற்காக தன்னிடம் புகார் அளிப்பதா? என்கிற ஜாதி வெறி தான் அதற்குக் காரணம். கவின்குமார் கவுன்சிலர் மட்டுமல்ல, பா.ஜ.க. வின் மொடக்குறிச்சி ஒன்றிய இளைஞரணி துணை அமைப் பாளரு மாவார். அன்று இரவு ரமணிச்சந்திரன் வீட்டுற்கே வந்த கவுன்சிலர் கவின் குமார், குடும் பத்தினரை மிரட்டிச் சென்றுள் ளார். அப்போதும் வெறி அடங்காத கவின்குமார் இரண்டு அடியாட்களோடு மறுநாளும் இரவு சுமார் 10.30 மணியளவில் வீட்டிற்கு வந்து, ஜாதி ரீதியாக இழிவாக பேசிய படியே கையாலும், காலாலும், கட்டையாலும் ரமணிச் சந்திரன், கோகிலா, சண்முகம் ஆகியோர் களை கடுமையாக தாக்கியுள் ளனர். ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் கோகிலா கொடுத்த புகாரின் அடிப் படையில் அரச்சலூர் காவல் நிலையத்தில் தாழ்த்தப்பட் டோர், பழங்குடியினர் வன் கொடுமைகள் தடுப்புச் சட்டம் உள்பட பல பிரிவுகளில் கவின் குமார் மற்றும் அடியாள் களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது..எனினும் தற்போது வரை பா.ஜ.க கவுன்சிலர் கவின் குமார் உள்ளிட்ட எவரும் கைது செய்யப்படவில்லை.
குற்றவாளிகளை உடனடி யாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப் பட்டவர்களுக்கு சட் டத்தின் அடிப்படையில் மருத் துவம் மற்றும் இதர தீர்வு உதவி களை தமிழ்நாடு அரசு உடனடி யாக செய்திட வேண்டும் இவ் வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களை தீண் டாமை ஒழிப்பு முன்ன ணியின் ஈரோடு மாவட்ட தலைவர் மா.அண்ணாதுரை, துணைத் தலைவர் என்.பாலசுப்ரமணியன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறு தல் தெரிவித்ததோடு சட்டப் பூர்வமான நடவடிக்கைகளையும் மேற் கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment