கல்லக்குறிச்சி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பெரியார் நேசன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 22, 2024

கல்லக்குறிச்சி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பெரியார் நேசன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்

13-27

கல்லக்குறிச்சி ஒன்றிய திராவிடர் கழகத் தலைவ ரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான மானமிகு பெரியார் நேசன் (வயது 94) இன்று (22.2.2024) காலை 9 மணி அளவில் மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து பெரி தும் வருந்துகி றோம். 30 ஆண்டுகாலம் கல்லக்குறிச்சி நகரக் கழகத் தலைவராகவும், 30 ஆண்டு காலம் ஒன்றிய கழகத் தலைவராகவும் பொறுப்பேற்று அருந்தொண்டாற்றியவர். அவர்தம் அரும்பெரும் இயக்கத் தொண்டினைப் பெருமை யுடன் நினைவு கூர்கிறோம்.
அவர் மறைவால் பெருந்துயரத்திற்கு ஆளாகி இருக்கும் குடும்பத்தினருக்கும். கழகத் தோழர் களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.விரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

No comments:

Post a Comment