“புதுச்சேரியில் சமூக நீதிக் குரல் “நூல் வெளியீட்டு விழா!
பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் வெளியிட
மேனாள் அமைச்சர் ஆர். விஸ்வநாதன் பெற்றுக் கொண்டார்
புதுச்சேரி, பிப். 24- புதுச்சேரி கலை இலக்கிய பெருமன்றத் தோழர் எல்லை சிவக்குமார் எழுதிய “புதுச்சேரியில் சமூக நீதிக் குரல்” எனும் நூல் வெளியீட்டு விழா 22.2.2024 அன்று மாலை 6 மணி முதல் 10 மணி வரை புதுச்சேரியில் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் அமு சலீம் தலைமை தாங்கினார். தோழர்கள் பால கங்காதரன், விவேகானந்த தாசன். முனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுவை மாநில கலை இலக்கிய பெருமன்ற பொருளாளர் துரை செல்வம் வர வேற்புரை ஆற்றினார். புதுச்சேரி திராவிடர் கழக மாநில தலைவர் சிவ.வீரமணி, ஏ.அய்.டி.யு.சி. பொதுச் செயலாளர் சேது செல்வம், பொதுப்பணித்துறை செயற்பொறி யாளர் பாலசுப்பிர மணியன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர்.
நூலை அறிமுகம் செய்து முனைவர் திருமா.அன்புச்செல்வன் பேசினார். திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை சந் திரசேகரன் நூலினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
நூலினை பெற்றுக்கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.விஸ்வநாதன் பாராட் டுரை நல்கினார். தோழர்கள் ராமன், தன்ராமன், தாமோதரன், தங்க.மணிமாறன், ஞானவேல் ஆகியோர் நூல்களை பெற்றுக் கொண்டனர்.
“சமூக நீதியும் சமத்துவமும்” எனும் தலைப்பில் சமூக சமத்து வத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் உரையாற்றி னார். நூலாசிரியர் எல்லை. சிவக் குமார் ஏற்புரை ஆற்றினார். ஓவி யர் சக்தி குருநாதன் நன்றி உரை ஆற்றினார்.
நிகழ்வில் புதுச்சேரி மாவட்ட கழக தலைவர் அன்பரசன், பொதுக் குழு உறுப்பினர் பழனி, பகுத்தறி வாளர்களாக மாநில பொறுப் பாளர் ஆடிட்டர் ரஞ்சித், இளை ஞர் அணி மாவட்டத் தலைவர் ராசா, விடுதலை வாசகர் வட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், பகுத் தறிவாளர் கழக புதுவை தலைவர் நடராசன், பெரியார் பெருந் தொண்டர் குப்புசாமி, ஆ,சிவ ராசன், வடலூர் முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னோடிகள் தனராமன், புதிய நீதி கட்சி தலை வர் பொன்னுரங்கம், பெரியார் அமலோறு அமலோற்பவ பெருந் தொண்டர் ஆறுமுகம், களஞ்சியம் வெங்கடேசன், ஆதிநாராய ணன், தட்சணாமூர்த்தி போன் றோர் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை அம லோற்பவ மேரி தொகுத்து வழங் கினார். தொடக்கத்தில் திரிபுரசுந் தரி குகன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடை பெற்றது.
No comments:
Post a Comment