சேலம், பிப்.20 பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரும் மார்ச் 2-ஆம் தேதி சேலம் நீதிமன்றத்தில் ஆஜ ராக வேண்டும் என உத்தரவிடப்பட் டுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த பியூஸ் என்பவர் சேலம் நீதிமன்றத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்து மத கலாச் சாரத்தை அழிக்கும் நோக்கில், தீபா வளியன்று பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என கிறிஸ்தவ மிஷனர்களின் உதவியோடு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட் டுள்ளது என யூடியூப் சேனல் ஒன்றில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இரு மதத்தினரிடையே மோதலை ஏற் படுத்தும் விதமாக பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த ஜேஎம் எண்:4 நீதிமன்ற குற்றவியல் நீதிமன்ற நடுவர் வரும் மார்ச் மாதம் பாஜக தலைவர் அண்ணாமலை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத் தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை மனு தாக்கல் செய்தார். இதனை எதிர்த்து பியூஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அண்ணாமலையின் மனுவை தள்ளு படி செய்தது.இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று சேலம் ஜேஎம் எண்:4 நீதிமன்றத்தில் நடந்தது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலை சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால், வழக் குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட நிலையில், அண்ணாமலை சார்பில் வழக்குரைஞர் நாச்சிமுத்து ராஜா ஆஜராகி வாதாடினார்.அப் போது, ‘பாஜக தலைவர் அண்ணா மலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கை மூன்று மாதத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும்’ என நீதித்துறை நடுவரிடம் வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். ஆனால், நீதித்துறை நடுவர், தமிழ்நாடு முழுவதும் பாஜக தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் செய்து வருகிறார். அவரை நீதிமன் றத்துக்கு வரச் சொல்லுங்கள் என்று கூறி வழக்கை வரும் மார்ச் 2-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த துடன், அன்று அண்ணாமலை நீதிமன் றத்தில் ஆஜ ராக உத்தரவிட்டார்.
Tuesday, February 20, 2024
அவதூறு பேச்சு : சேலம் நீதிமன்றத்தில் மார்ச் இரண்டில் பிஜேபி அண்ணாமலை ஆஜராக வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment