மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தகவல்
சென்னை, பிப். 27- தமிழ்நாடு வரும் மோடிக்கு எதிராக தமிழ் நாடு முழுவதும் காங்கிரஸ் கருப் புக் கொடி போராட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
சென்னையில் நேற்று (26.2.2024) செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது:
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ்நாடு மீனவர்களுக்கு பிரச் சினைகள் ஏற்பட்டு கொண்டிருக் கின்றன. சுதந்திரமாக தங்களது தொழிலை மீனவர்கள் செய்ய முடியவில்லை.
குறிப்பாக இலங்கை மற்றும் அண்டை நாடுகள் தமிழ்நாடு மீன வர்களை குறிவைத்து தாக்கு கின்றன. இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்களின் வலையை கிழிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும், சிறைப்படுத் துவதும் காலங்காலமாக தொடர் கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக, இலங்கை கடற்படையினர், இலங்கை மீனவர் களை அழைத்து வந்து தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத் துகிறார்கள். 10 ஆண்டுகளாக மோடி அரசு என்ன செய்து கொண் டிருக்கிறது. இந்திய வெளியுறவுத் துறை முழுவதுமாக தோல்வி அடைந்திருக்கிறது.
இப்போது 2 நாட்களுக்கு முன்பு ராமேசுவரம் மீனவருக்கு உச்சபட்சமாக 6 மாதம் சிறை தண் டனையை இலங்கை அரசு வழங்கியிருக்கிறது.
மோடி அரசு மீனவர்களை முழுவதுமாக கைவிட்டுவிட்டது.
இதனை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது. இதைக்கண்டித்து, 27ஆ-ம் தேதி ராமேசுவரம் கடலில் இறங்கி மிகப்பெரிய ஆர்ப்பாட் டத்தை நடத்த இருக்கிறோம். மேலும், விவசாயிகளுக்கு எதிராக வும் மோடி அரசு செயல்படுகிறது.
27ஆ-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும்.
கூட்டணி பேச்சுவார்த்தை சுமு கமாக நடந்து வருகிறது. கூட்டணி தொடர்பாக டில்லியில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பங் கேற்பதற்காக செல்கிறேன்.
விஜயதரணிக்கு 3 முறை சட்ட மன்ற உறுப்பினர் வாய்ப்பு காங் கிரஸ்தான் வழங்கியது. தேசத்தை காப்பவர்கள் காங்கிரஸில் இருப் பார்கள். பயந்தவர்கள் வெளியேறு வார்கள். மிக விரைவில் காங்கிரஸ் தேசிய தலைவர் தமிழ்நாடு வரு வார். பாஜக தலைவர்கள், பாஜக அமைச்சர்களுக்கு உண்மையே பேச தெரியாது. ஊழல் கட்சி என்பது பாஜகதான். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment