ஒன்றிய பா.ஜ.க. அரசின் தேர்தல் பத்திரத் திட் டத்தை எதிர்த்து உச்சநீமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பு வருமாறு:
தீர்ப்பு – ஆணைகள்!
(A) தேர்தல் பத்திர திட்டமானது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் – 1951 பிரிவு 29 C(1) (2017 ஆம் ஆண்டு நிதி சட்டத்தின் பிரிவு 137இன் படி திருத்தப் பட்டது)
கம்பெனிகள் சட்டத்தின் பிரிவு 182(3) (2017 ஆம் ஆண்டின் நிதிச் சட்டத்தின் பிரிவு 154 இன் படியும், பிரிவு-11 இன் படியும் திருத்தப்பட்டது) ஆகியவை இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 19(1)(a)-க்கு புறம் பானவை. (முரணானவை).
(B) நிறுவனங்கள் வரையரையற்ற நன்கொடை களை அரசியல் கட்சிகளுக்கு அளித்திட அனுமதிக் கும் கம்பெனி சட்டத்தின் பிரிவு182(1) நீக்கப்படுகிறது. இந்தப் பிரிவு நியாயமற்றது. அரசமைப்புச் சட்டத்தின் கூறு 14க்கும் புறம்பானது.
தேர்தல் பத்திரத் திட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் பற்றிய முழுமையான விவரங்களை வெளியிட இந்த நீதிமன்றம் அறிவுறுத்துகிறது.
12.04.2019 அன்று இந்த நீதிமன்றம் அளித்த இடைக்கால உத்தரவின்படி இதுவரை அரசியல் கட்சிகளால் பெறப்பட்ட நன்கொடைகளும், பின்னர் அளிக்கப்பட்ட நன்கொடைகள் பற்றிய விவரங்களும் உறையில் வைத்து மூடி முத்திரையிட்டு இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட வேண்டும்.
அறிவுறுத்தல்கள்: (ஆணைகள்)
1) வங்கியிலிருந்து தேர்தல் பத்திரம் வழங்கப் படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
2) ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவானது 12.04.2019 நாளிட்ட நீதிமன்ற இடைக்கால உத்தர வின்படி இதுவரை விற்பனையான தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
3) இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தின்படி இதுவரை அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திர திட்டத்தின் கீழ் பெற்றுக்கொண்ட நன்கொடைப் பட்டியலை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, தேர்தல் ஆணையத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
4) இந்த விவரங்கள் மூன்று வார காலத்திற்குள் (6.3.2024-க்குள்) அனுப்பப்பட வேண்டும்.
5) ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவால் அனுப்பப் பட்ட விவரங்களை அவற்றைப் பெற்றுக்கொண்ட ஒரு வார காலத்திற்குள், இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட வேண்டும் (13.03.2024-க்குள்ளாக).
6) தேர்தல் பத்திரங்கள், அவை வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள் பணமாக்கப்பட வேண்டும். பணமாக் கப்படாமல் உள்ளவை தேர்தல் கட்சிகள் வசம் இருந்தாலோ, அரசியல் கட்சிகளால் திருப்பி அனுப் பப்படும் நிலையில் இருந்தாலோ, அல்லது பத் திரத்தை வாங்கியவர் வசம் இருந்தாலோ, பத்திரத்தை வழங்கிய வங்கியிடம் செலுத்தப்பட வேண்டும். பெற்றுக்கொண்ட வங்கி, செல்லத்தக்க பத்திரங் களுக்கு உரிய தொகையை, பத்திரங்களை வாங்கிய நபரின் கணக்கில் வரவு வைத்திட வேண்டும்.
No comments:
Post a Comment