
அமேதி, பிப்.20 பாரத் ஜோடோ நியாய நடைப் பயணம் மேற்கொண் டுள்ள காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று (19.2.2024) உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் நகரில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
அயோத்தி ராமன் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க தொழிலதிபர்கள், பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. பழங்குடி மக்களின் முகமாக அறியப்படும் குடியரசுத் தலை வர் திரவுபதி முர்முக்குகூட அழைப்பு விடுக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட (ஓபிசி), பழங்குடிகள், ஏழைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை. நாட்டின் 73 சதவீத மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். விவசாயிகளின் பணத்தை பறித்து முதலாளி களின் பைகளை பிரதமர் மோடி நிரப்பி வருகிறார். சிபிஅய், அமலாக்கத் துறை உள்ளிட்ட ஒன்றிய அமைப்புகள் பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுகின்றன. இவ்வாறு ராகுல் பேசினார். அமேதியில் ராகுல் காந்தி நுழைந்தபோது காங்கிரஸ், பாஜக தொண்டர்களிடையே மோதல் ஏற் பட்டது. காவல்துறையினர் தடுப் புகளை அமைத்து பாஜக தொண் டர்களை கட்டுப்படுத்தினர்.
No comments:
Post a Comment