கன்னியாகுமரி,பிப்.27- பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக எம்.இ.டி கல்வி நிறுவனம் ஒருங்கிணைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சுப் போட்டி செண்பகராமன்புதூரில் எம்.இ.டி. கல் வியல் கல்லூரியில் “பெரியாரும் பெண்ணுரிமையும்”, “பெரியார் ஒரு தொலைநோக்காளர்”, “பெரியார் அறிவியல் பார்வையும் அணுகுமுறையும்” ஆகிய தலைப்புகளில் நடைபெற்றது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா கல்லூரி செயல் அதிகாரி கோ.மகாதேவன் தலைமையில் நடைபெற்றது. கழக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தொடக்கவுரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு மாணவ, மாண வியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். கல் லூரி நிர்வாகம் சார்பாகவும் பரிசுகள் வழங்கப்பட்டன. கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம்; துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் மா.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறீலதா(கல்லூரி முதல்வர்) தமிழ் பேராசிரியை பெனில் மற்றும் அதிகமான மாணவ, மாண வியர்கள் இந்த பரிசளிப்பு நிகழ்சியில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment