கொக்கூர், பிப். 27- பெரியார் பெருந் தொண்டரும், திராவிட இயக்க மூத்த தோழருமான கொக்கூர் கோவிந்தசாமி அவர்கள் 25.2.2024 அன்று தனது 101ஆவது வயதில் இயற்கை எய்தியதை ஒட்டி எந்த வித சடங்கு சம்பிரதாய நிகழ்வுகளுமின்றி 26.2.2024 அன்று அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
உடற்கொடை வழங்குவதற்கு முன் நடைபெற்ற இரங்கல் கூட் டத்திற்கு குத்தாலம் தொகுதி சட்ட மன்ற மேனாள் உறுப்பினர்
பி.கல்யாணம் தலைமை வகித்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்களின் இரங்கலுரையை மாவட்டச் செயலாளர் கி.தளபதி ராஜ் வாசித்தார்.
அதனைத் தொடர்ந்து குத்தா லம் ஒன்றிய திராவிடர் கழக தலை வர் சா.முருகையன், குத்தாலம் சட்டமன்ற மேனாள் உறுப்பினர் க.அன்பழகன், திமுக குத்தாலம் ஒன்றிய செயலாளர்கள் மங்கை சங்கர், வைத்தியநாதன், ராஜா, கிளைச்செயலாளர் சின்னக்குமார், கலைக்குமார் ஆகியோர் இரங்கலு ரையைத் தொடர்ந்து மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் இரங்கலுரை ஆற்றி வீர வணக்கம் செலுத்த அனைவரும் அவரைத் தொடர்ந்து முழக்கமிட்டு வணக் கம் செலுத்தினர்.
தமிழர் தலைவரின் இரங்கலு ரையும் விடுதலை ஞாயிறு மலரில் 21.8.2022 இல் வெளிவந்த கோவிந்த சாமி அவர்களின் பேட்டியும் நகல் எடுக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
மாவட்ட அமைப்பாளர் ஞான. வள்ளுவன், துணைச்செயலாளர் அரங்க.நாகரத்தினம், நகர தலை வர் சீனி.முத்து, ஒன்றிய தலைவர் அ.சாமிதுரை, குத்தாலம் ஒன்றிய செயலாளர் கு.இளமாறன், துணைச் செயலாளர் தி.சபாபதி, விவசாய அணி செயலாளர் கு.இளஞ்செழியன், சீர்காழி ஒன்றிய செயலாளர் கடவாசல் செல்வம், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் பூ.பாண்டுரங்கன், பகுத்தறிவாளர் கழக தலைவர் இரெ.செல்லதுரை, மற்றும் திராவிடர் கழக, திராவிட முன்னேற்ற கழக பொறுப்பாளர் கள் அனைத்துக்கட்சி பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள், உறவினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment