'தமிழ்ச் செம்மல்' விருது பெற்ற பெரியார் பெருந்தொண்டருக்கு கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 27, 2024

'தமிழ்ச் செம்மல்' விருது பெற்ற பெரியார் பெருந்தொண்டருக்கு கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து

அரியலூர், பிப். 27- அரியலூர் மாவட்டம். பொன்பரப்பி ப.முத்துக்குமரன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் செய்துவரும் தமிழ்ப் பணியினை பாராட்டி 22.02.2024 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறை விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும், செய்தித்துறை அமைச்சர், மாண்புமிகு. மு.பெ.சாமிநாதன் அவர்கள் தமிழ்நாடு அரசின் “தமிழ்ச் செம்மல்” விருது வழங்கி சிறப்பித்தார். விருது பெற்ற பெரியார் பெருந்தொண்டர், ப.முத்துக்குமரன் (94) அவர்களை, விடுதலை நீலமேகன் மாவட்ட திராவிடர் கழக தலைவர், தலைமையில் தோழர்கள் சந்தித்து பயனாடை அணிவித்து கழகத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
வருகை தந்து வாழ்த்திய மு. கோபாலகிருஷ்ணன், (மாவட்ட செயலாளர்) காப்பாளர்.சு.மணிவண்ணன், பெரியார் பெருந்தொண்டர் புழல் சா.இராசேந்திரன். செந்துறை மதியழகன் ஆகியோருக்கு முத்துக்குமரன் கழக நூல்கள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார்.

No comments:

Post a Comment