தஞ்சை மேனாள் எம்.பி., நண்பர் பரசுராமன் மறைவிற்கு நமது ஆழ்ந்த இரங்கல்! - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 7, 2024

தஞ்சை மேனாள் எம்.பி., நண்பர் பரசுராமன் மறைவிற்கு நமது ஆழ்ந்த இரங்கல்!

21-4

தஞ்சை வல்லம் அருகில் உள்ள நீலகிரி பஞ்சாயத்துத் தலைவராக இருந்து, தமது இடையறாத உழைப்பின்மூலம் பல வகையில் உயர்ந்து, தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகி, பொது வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றவர். எவரிடமும் பண்புடனும், அன்புடனும் பழகிடும் பான்மையர் பரசுராமன் (வயது 64).
அவர் உரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் என்ற முறையில், நமக்குப் பல ஆண்டுகாலமாக அறிமுகமாகிய நண்பர்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இரா.குணசேகரன் அவர்களுக்கு சம்பந்தி உறவுமுறை உள்ளவர்.
அவருக்கு இணையர் – விசயலட்சுமி, மகள் மருத்துவர் பல்லவி, மகன் வழக்குரைஞர் பவித்திரன் ஆகியோர் உள்ளனர்.
சில காலம் உடல்நலம் குன்றி, தேறி வந்தவர், இன்று (6.2.2024) மறைந்தார் என்று அறிந்தபொழுது, மிகவும் துயரமும், வேதனையும் அடைகிறோம்.
அவரது பிரிவினால் வருந்தி துன்புறும் அவரது குடும்பத்தினர், கொள்கை உறவுகள், அப்பகுதி மக்கள் அனைவருக்கும் நமது ஆறுதலையும், மறைந்தவருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 
6.2.2024

No comments:

Post a Comment