கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்
தி.மு.க.வின் தீவிர கொள்கை உணர்வாளரும், சீரிய பண்பாளரும், சிறந்த நட்பாளருமான மூக்கனூர் அய்யா திரு. பெருமாள் (ரெட்டியார்) (வயது 94) அவர்கள் இன்று (27.2.2024) காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரப் படுகிறோம்.
இவர் ஊராட்சி மன்றத் தலைவர், மாவட்ட கவுன்சிலர், நிலவள வங்கித் தலைவர், பால் சொசைட்டி தலைவர் போன்ற பதவிகளில் தனது மக்கள் நல செயல்களை செய்து முடித்தவராவார். அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன், ஆகியோரின் அன்பைப் பெற்றவர். நமது இயக்கத் தோழர்களுடனும், எம்முடனும் மிகுந்த அன்போடு பழகக் கூடியவராவார்.
பல ஆண்டு காலம் பான்மையோடு எங்க ளோடும், எமது குடும்பத்தினருடனும் பாசத்துடன் பழகிய குடும்பம் மானமிகு அய்யா பெருமாள் அவர்களது குடும்பம்.
தொடர்ந்த ‘விடுதலை’ வாசகர், அந்தக் குடும்பத்து மணவிழாவை சேலத்தில் நான் தலைமை தாங்கி நடத்தி வைத்துள்ளேன்.
விருந்தோம்பலில் அவருக்கு இணையாக எளிதில் எவரையும் நம்மால் காட்ட இயலாது. மறைந்த அவரது வாழ்விணையர் அம்மா அவர் களும், அவரது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தவர் களும் மிக்க அன்புடன் எங்களை உபசரிக்கும் பான்மை, தங்கி ஓய்வு எடுங்கள் என்று கூறி எளிதில் வழி யனுப்பிட தயக்கம் காட்டுவார்கள். தோழர் சேலம் பழனிபுள்ளையண்ணன் மூலம் அவர் எங்களுக்கு அறிமுகம்.
அத்தகையவர் நிறை வாழ்வு வாழ்ந்தார் என்றாலும் பெரும் இழப்பு – மனிதநேயராய் நண்பர்களிடம் – உறவினர்களிடம் ஊர்க்காரர் களிடம் இருந்த அந்த மாமனிதரான அய்யா பெருமாள் (ரெட்டியார்) அவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல். குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறுகிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
27.2.2024
தொடர்புக்கு: அவரது மகன் ரத்தினம் 9360059703
No comments:
Post a Comment