திருவாரூர், பிப். 11- நேற்று (10.02.2024) மாலை 4.30 மணி அளவில் திருவாரூர் மாவட்ட கழக அலுவலகத்தில் திரா விடர் கழக மகளிரணி-திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வருகை தந்த அனை வரையும் மாவட்ட மகளிரணி செயலா ளர் வரவேற்றார். மாவட்ட மகளிரணி தலைவர் மகேசுவரி நிகழ்விறகு தலை மையேற்றார். கோ.செந்தமிழ்செல்வி , மகளிர் பாசறை ஸ்டெல்லா மேரி, மாணவர் கழகத் தோழர் நர்மதா ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
திராவிடர் கழகத்தில் மகளிரின் பங்கு , தமிழர் தலைவர் ஆசிரியரின் தொடர் பிரச்சாரங்கள், 2024 நாடாளு மன்ற தேர்தலில் திராவிடர் கழக மகளிர் செயல்பட வேண்டிய களங்கள், புதிய மகளிரை அமைப்புக்குள் இணைத்து செயல்படுதல் ஆகியவை குறித்து கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப் புரை ஆற்றினார்.
நிகழ்விற்கு ஏராளமான மகளிர் வர காரணமாக அமைந்து, கலந்துரையாடல் கூட்டத்தினை குறுகிய காலத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்து தந்த மாவட்ட கழகத் தலைவர் வீ.மோகனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் தலைமை கழக அமைப்பாளர் கிருஷ்ணமர்த்தி, மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட துணைத் தலைவர் அருண் காந்தி, இரா.சிவக்குமார் உள்ளிட்ட திரா விடர் கழகத் தோழர்கள் பங்கேற்று சிறப் பித்தனர்.
மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மண்டோதரி நன்றியுரை கூறினார்.
No comments:
Post a Comment