11.2.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
♦ மக்களவை தேர்தலுக்கு முன்பாக சிஏஏ எனும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦கடந்த 2022-2023ஆம் நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க. ரூ.1,294 கோடி பெற்றுள்ளது. இதர பல்வேறு வழிகள் மூலம் ஓராண்டில் கட்சிக்குக் கிடைத்துள்ள மொத்த வருவாய் ரூ.2,360.8 கோடி. இது முந்தைய 2021-2022ஆம் ஆண்டில் பெற்ற ரூ.1,917 கோடியை விட அதிகம். முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு கடந்த ஆண்டு தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த நன்கொடை ரூ.171 கோடி. இது பாஜவை விட 7 மடங்கு குறைவு.
♦ மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு; இராமன் கோவில் தொடர்பான விவாதத்தில் பங்கேற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு. அரசியலை வகுப்புவாதமயமாக்கும் போக்கினை நாங்கள் ஆதரிக்க முடியாது என கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ ‘ஊழல்வாதிகளுக்குத்தான் நாட்டில் அமிர்த காலம் இருக்கிறது. ரூ.777 கோடியில் கட்டப்பட்ட பிரகதி மைதான சுரங்கப்பாதை ஓராண்டில் பயன்படுத்த முடியாத நிலையில் மாறி உள்ளது. பிரதமர் மோடி ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்திலும் திட்டமிடாமல் மாடலிங் செய்து வருகிறார். மேலும், அமலாக்கத் துறை, சிபிஅய், வருமானவரித்துறை ஆகியவை ஊழலுக்கு எதிராகப் போராடவில்லை. ஜனநாயகத்திற்கு எதிராகப் போராடு கின்றன என டிவிட்டரில் ராகுல் காந்தி பதிவு
தி இந்து:
♦ ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாக ஜனநாயக அமைப்பு மாநாட்டில் கல்வியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் பேச்சு.
– குடந்தை கருணா
No comments:
Post a Comment