சிலிகுரி, பிப்.28 ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும் பெண் சிங்கத்திற்கு சீதா என்று பெயர் சூட்டிய விவகாரத்தில் திரிபுரா மாநில தலைமை வனப்பாதுகாப்பு அதிகாரியை பணி இடைநீக்க செய்தது திரிபுரா மாநில பாஜக அரசு
திரிபுரா மாநிலத்தில் இருந்து பிப்ரவரி 12ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு சிங்கங்களுக்கு சீதா – அக்பர் என்று பெயரிடப்பட்ட விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.
சிங்கங்களுக்கு பெயர் வைத்த விவகாரத்தில் மேற்கு வங்க அதிகாரிகளை வி.எச்.பி. அமைப்பு குறைகூறிய நிலையில் கடவுள் பெயரை எந்த ஒரு விலங்குக்கும் வைக்கக்கூடாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் திரிபுராவில் இருந்து சிலிகுரிக்கு அனுப்பிவைத்த போது பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த திரிபுரா அரசு சிங்கங்களுக்கு பெயர் வைத்த விவகாரம் தொடர்பாக அம்மாநில முதன்மை தலைமை வனப்பாதுகாப்பு அதிகாரி பிரபின் லால் அகர்வாலை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
ஆட்சிக்கு வந்தால் ‘அக்னிபாத்’ ரத்து செய்யப்படும் காங்கிரஸ் உறுதி
புதுடில்லி, பிப்.28- டில்லியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட், அக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் பவன் கேரா, தீபேந்தர் சிங் ஹூடா ஆகியோர் கூட் டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது சச்சின் பைலட் கூறியதாவது:
அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்த எந்தத் தேவையும் ஏற்படவில்லை. இதனால் ஒன்றிய அரசு சிறிது நிதியை சேமிக்குமே தவிர, அந்தத் திட்டத்தால் எவருக்கும் எந்தப் பயனும் இருக்காது. ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், முப்படைகள் ஆள்தேர் வுக்கு பழைய நடைமுறையே பின்பற்றப்படும் என்று தெரிவித்தார்.
தவறான விளம்பரங்களை வெளியிடுவதா? பதஞ்சலி நிறுவனத்திற்கு
உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி,பிப்.28- பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதனிடையே நவீன மருந்துகளுக்கு எதிராக பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை செய்து வருவதாக இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பதஞ்சலி நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தி ருந்தது. மேலும் இனி தவறான விளம்பரங்களை செய்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.
இருப்பினும் கடந்த 4 மாதங்களாக பதஞ்சலி நிறுவனம் இதுபோன்ற விளம்பரங்களை நிறுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந் துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உத்தரவை மீறி தவறான விளம்பரங்களை வெளியிட்டது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் இதே நிலை தொடர்ந்தால் பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக கடுமையான உத்தரவு களை பிறப்பிக்க நேரிடும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
No comments:
Post a Comment