டேராடூன்,பிப்.29- கர்ப்பிணியாக இருப்பதால் வேலை மறுக்கப்படுவது அரசமைப்புக்கு எதிரானது எனக்கூறி, 24 மணி நேரத்தில் மனுதாரரை பணிய மர்த்த உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குநரகம் செவிலியருக்குக்கான நியமனக் கடிதம் கொடுத்த நிலையில், கர்ப்பமாக இருப்ப தால் ‘தற்காலிகமாக பணிக்கு தகுதியற் றவர்’ எனக்கூறி நைனிடால் நகரில் உள்ள பிடி பாண்டே மருத்துவமனை வேலை கொடுக்க மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து மிஷா உப்பத்யாய் என்ற 13 வார கர்ப்பிணி உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். இந்த மனு நீதிபதி பங்கஜ் புரோ ஹித் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங் களை பதிவு செய்து கொண்ட நீதிபதி, “கர்ப்பிணியாக இருப்பதால் ஒருவருக்கு வேலை மறுக்கப்படுவது அரசமைப்புக் கும், பெண்மைக்கும் எதிரானது. தாய்மை என்பது ஒரு வரம். புதிதாக பணிக்கு அமர்த்தப்படும் ஒருவர் தாய் மையடைந்த பிறகு அவருக்கு பேறு கால விடுப்பு அளிக்கப்படும்பொழுது, கர்ப்பிணிக்கு ஏன் வழங்கக்கூடாது?” 24 மணி நேரத்தில் 13 வார கர்ப்பிணியை மருத்துவமனையில் செவிலியராக பணியமர்த்த மருத்துவமனைக்கு உத்தர விடுகிறோம்.” இவ்வாறு உத்தரவிட்டனர்.
Thursday, February 29, 2024
Home
இந்தியா
கர்ப்பிணியாக இருப்பதால் வேலை மறுக்கப்படுவது அரசமைப்புக்கு எதிரானது : உயர்நீதிமன்றம் அதிரடி
கர்ப்பிணியாக இருப்பதால் வேலை மறுக்கப்படுவது அரசமைப்புக்கு எதிரானது : உயர்நீதிமன்றம் அதிரடி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment