துக்ளக்குக்குப் பதிலடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 6, 2024

துக்ளக்குக்குப் பதிலடி

featured image

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)

துக்ளக்குக்குப் பதிலடி
திராவிட மாடல் என்றால் தேள்கொட்டுவது ஏன்? (2)


நேற்றைய (5.2.2024) தொடர்ச்சி…

தந்தை பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் ஆன பின்பும் அவர் அன்றாடம் பேசப்படுகிறார். அவர் கூறிய கருத்துகள் எங்கும் ஒலிக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்திலேயே “வாழ்க பெரியார்!” “வெல்க திராவிடம்” என்ற முழக்கம் கேட்கப்படுகிறதே!

தந்தை பெரியாரின் “Collected works of Thanthai Periyar” என்ற நூல் பஞ்சாப் மொழியில் பஞ்சாபில் வெளிவந்துள்ளதே! தந்தை பெரியார் தீட்டிய ‘இராமாயண பாத்திரங்கள்’ என்ற நூல் வங்க மொழியில் வங்காளத்தில் வெளிவந்துள்ளதே!
தந்தை பெரியாரின் படைப்புகளை 21 மொழிகளில் தமிழ்நாடு அரசு கொண்டு வருகிறதே! தந்தை பெரியார் பிறந்த நாள் “சமூக நீதி நாளாக” தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு, அய்.ஏ.எஸ். அதிகாரி முதல், அடித் தளப் பணியாளர்கள் வரை உறுதி மொழி எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதே!
இந்த மனுஷன் மறைந்து அரை நூற்றாண்டு ஆன பிறகும் கூட நம்மை ‘உயிர்வதை’ செய்து கொண்டு இருக்கிறாரே என்ற ஆத்திரம் ஆதிக்கக் கூட்டத்தின் சிண்டைப் பிடித்து உலுக்குவதைப் புரிந்து கெள்ள முடிகிறது.

(2) திராவிடர் கழகத் தலைவர் தகைசால் தமிழர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மீது இந்தக் கூட்டத் துக்கு என்ன எரிச்சல்?
ஈ.வெ.ரா.வுடன் இந்தத் ‘திராவிட அரக்கர்’ கூட்டத்திற்கு மூடு விழா நடந்துவிடும் என்று தோளில் தொங்கும் தங்களின் மூக்கணாங்கயிறுக்கு முத்தமிட்டுக் கொண்டிருந்த கூட்டத்திற்கு அதிர்ச்சிப் பூகம்பம்தான் இந்த மானமிகு தலைவர் வீரமணி!

எந்த அளவுக்கு? பழனியிலே பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி வீரமணிக்குப் பாடை கட்டி ஊர்வலமா கத் தூக்கினார்கள் என்றால், அதன் பொருள் என்ன?
பெரியார் ஈ.வெ.ரா. விட்டுச் சென்ற பணிகளை வீறு கொண்டு நடத்தி வருகிறாரே இந்த வீரமணி! இளை ஞர்கள் அலை அலையாகக் கருஞ்சட்டை அணிந்து வலம் வருகிறார்களே!
ஈ.வெ.ரா. காலத்தில் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு 49 விழுக்காடு என்றால், அவர் சீடர் வீரமணி காலத்தில் 69 விழுக்காடாக அல்லவா உயர்ந்துவிட்டது. முதல் சட்டத் திருத்தம் ஈ.வெ.ரா.வால் என்றால் 76ஆவது சட்டத் திருத்தம் இந்த வீரமணியால் அல்லவா நிகழ்ந்து விட்டது.

ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்புடன் இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாட்டில் தானே அசைக்க முடியாத ஒன்றாக அது முடி சூடிக் கொண்டிருக்கிறது!
ஒன்றிய அரசு துறைகளில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு அகில இந்திய அளவில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைக்க வழி செய்து விட்டாரே! அகில இந்திய அளவில் ஒடுக்கப்பட்ட தலைவர்களை ஒருங் கிணைத்து 42 மாநாடுகளையும் 16 போராட்டங்களையும் நடத்தி உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வி.பி.சிங் அவர்களைப் பயன்படுத்தி – கமண்டலா – மண்டலா? என்று அவரையே பேச வைத்து, மண்டல் குழு பரிந்து ரையை நிறைவேற்றம் செய்து விட்டாரே! “வீரமணி யைப் பார்க்கும் பொழுதெல்லாம் நான் சமூக நீதி உணர்வைப் பெறுகிறேன்!” என்று பிரதமர் வி.பி.சிங்கே பேசும் அளவுக்கு – தமிழ்நாட்டில் இருந்த சமூக நீதிக் காற்றை வடக்கிலும் வீசச் செய்து விட்டாரே!
மறைந்த சமூக நீதிக் காவலர் நமது மதிப்புக்கும், அன்புக்கும் உரிய வி.பி. சிங் அவர்கள் என்ன கூறினார்?

“சமூக நீதிக்கு ஆதரவான அனைவரும் ஒன்றை உணர்ந்து செயல்பட வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் குறிப்பாக அனைத்து சமூகநீதி ஆதரவாளர்களும் ஒன்று சேர்ந்து, ஹிந்து மதவெறி சக்திகளின் சவாலை சந்திக்க வேண்டும். மதவெறி சக்திகளின் முக்கிய கேந்திரமாக விளங்கும் உத்தரப்பிரதேசத்தில் அவர் களின் முதுகெலும்பை நாம் முறித்ததாக வேண்டும். மரியாதைக்குரிய சந்திரஜித் அவர்கள் நான் முன்னின்று நடத்த வேண்டும் என்று கூறினார். ஆனால் இது தனி மனிதனால் செய்யக் கூடிய காரியமல்ல. நண்பர் வீரமணி அவர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி, அழைத்துச் செல்லும் “கொறடா” ஆவார். அந்தத் தகுதி அவருக்குத்தான் உண்டு. எனவே இனியும் காலம் தாழ்த்தாது நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். நான் திரு வீரமணி அவர் களையும், அவரது இயக்கத்தவர்களையும் மிகுந்த நம்பிக் கையோடு எதிர்பார்க்கிறேன். அவர்கள் சுயநல மற்ற தொண்டினைத் தரக் கூடியவர்கள்” என்று முழங்கினாரே! எப்பொழுது அந்த முழக்கம்? இன் றைக்கு 29 ஆண்டுகளுக்கு முன்பு! (டில்லி பெரியார் விழா – 19.9.1995).

ஆத்திரக் கொப்புளங்கள் தோன்றாதா ஆரிய கூட்டத்துக்கு? அலை மோதலால் அக்ரகாரங்கள் ஆவேசம் கொள்கின்றன – கீழ்த்தரமான வகைகளில் வார்த்தைகளைக் கொட்டித் தீர்க்கின்றன.
எழுதட்டும் எழுதட்டும் – ஏசட்டும் ஏசட்டும்! அதன் எதிர்வினைகள் அவாளுக்கு மேலும் சோதனைகளா கவும், பார்ப்பனர் அல்லாத மக்களுக்குச் சாதனை களாகவும் அல்லவா மலர்ந்து மணம் வீசும்.
“திராவிட இந்தியாவாக” மாற்ற இந்தியா கூட்டணி முன் வர வேண்டும் என்று வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளாராம்.
வந்தது ஆபத்து என்று வாலை முறுக்குகிறது முப்புரிக் கூட்டம்.

28 கட்சிகளின் கூட்டணி சமூக நீதியை எப்பொழுது முன்னெடுத்ததோ, அக்கணமே திராவிட இந்தியா காலடியை எடுத்து வைக்க ஆரம்பித்து விட்டதே!
ஒன்றிய அரசில் 90 செயலாளர்கள் இருக்கிறார்கள் என்றால் மூன்றே மூன்று பேர் தான் பிற்படுத்தப்பட் டவர்கள் என்று எப்பொழுது இளந்தலைவர் இராகுல் காந்தி சுட்டிக் காட்ட ஆரம்பித்தாரோ பத்திரிகையாளர் களைப் பார்த்து, ‘உங்களில் ஓபிசி எத்தனை பேர்கள்?’ என்று எப்பொழுது கேள்வி எழுப்பினாரோ அந்தக் கணமே திராவிட இந்தியாவின் அடுத்த பாய்ச்சல் ஆரம்பமாகி விட்டதே!

வடக்கிலும் தெற்கிலும் மேற்கிலும் கிழக்கிலும் இராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை நடை பயணம் என்பதில் சமூக நீதிக்கான பாட்டையின் பரிணாமம் பளிச்சிட்டு விட்டதே!
எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டில் 50 விழுக்காடு உச்சவரம்பைத் தகர்ப்போம் என்று சொல்லியிருக்கிறாரே ராகுல் – இதுதான் திராவிட இந்தியாவின் சமூகநீதிக்கான முழக்கம்.
இன்னொரு செய்தி முக்கியமானது. துக்ளக் (7.10.2020) எச்சரிக்கை ஒன்றை விடுத்தது – யாருக்குத் தெரியுமா?
பிஜேபிக்கு! அதிர்ச்சியாகவும், ஆத்திரமாகவும் இருக்கிறதா?

கேள்வி: திடீரென்று தமிழக பா.ஜ.க. பெரியாரை கொண்டாட ஆரம்பித்திருக்கிறதே?
துக்ளக் பதில்: ஈ.வெ.ராவை ஏற்றுக் கொண்டால் கழகங்களின் வாக்குகள் பெருமளவுக்கு தங்களுக்கு மாறி 60 இடங்களைப் பெற்று விடுவோம் என்று பா.ஜ.க. நினைப்பது போலிருக்கிறது… … பா.ஜ.க.வுக்கு தேசிய மயமே தனித் தன்மை – அதில் ஈ.வெ.ராவைக் கலந்து குழப்பி குளறுபடி செய்யாமல் இருப்பது பா.ஜ.க.வுக்கும் நல்லது, தேசியத்துக்கும் நல்லது – என்று பதறி அடித்துக் கொண்டு பா.ஜ.க.வுக்கு அறிவுரை கூறினார் குருமூர்த்தி அய்யர் என்றால் இதன் பொருள் என்ன? பா.ஜ.க.வுக்குள்ளும் பார்ப்பனர் – பார்ப்பன ரல்லாதார் போராட்டம், ஆரியர் – திராவிடர் போராட் டம் வெடிக்க ஆரம்பித்து விட்டது என்று பொருள்.
திராவிடமா? அப்படி ஒன்று இருக்கிறதா? ஈ.வெ.ரா. ஞாபக மறதியில் சொன்ன வார்த்தை என்று எழுதும் துக்ளக்கே – அந்தத் திராவிடத்தின் ஈட்டி பா.ஜ.க.வுக் குள்ளும் பதம் பார்க்க ஆரம்பித்து விட்டது என்பது புரிகிறதா?
‘ஹிந்தி எதிர்ப்பு ஏன்? கைவிடுக’ என்று தேனில் நஞ்சை வைத்து ஊட்டப் பார்க்கும் உஞ்சி விருத்திகளே உங்கள் பருப்பு இங்கு வேகாது என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.
தி.மு.க.வுக்கும் தளபதி மு.க.ஸ்டாலினுக்கும் அறிவுரை என்னும் வலை வீசி பார்த்தார் குருமூர்த்தி அய்யர்.
ஈரோடு தி.மு.க. மாநாட்டுக்குப் பின் அந்த நப்பாசை யின் நாக்கு வறண்டு விட்டது.
“ஈரோட்டு மாநாடு தி.க.வின் நிலையை தி.மு.க. தழுவுவதைப் போல் தோன்றுகிறது” என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டது துக்ளக்.
இதற்குத் தக்க பதிலடி கொடுத்தார் தளபதி மு.க.ஸ்டாலின்.
“தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் வழியில் இந்தப் பேரியக்கத்தின் செயல் தலைவர் என்ற பொறுப்பில் உள்ள நான் எந்தச் சூழலிலும், திராவிட இயக்கத்தின் முழு மூச்சான கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பேன். அதற்காக எதையும், யாரையும் எதிர்கொள்வேன் – திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்தக் கொம்பனாலும் முடியவே முடியாது என்பதே என் உறுதியான நிலைப் பாடு” – என்று நியூஸ் 7 தொலைக்காட்சிப் பேட்டியில் தொண்டைச் சதையை இறுக நெரிக்குமாறு எதிரிக ளுக்கு பதிலடி – சாட்டையடி கொடுத்தாரே தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.
மேலும் ஒருபடி மேலே சென்றும் முழக்கமிட்டார்.

“நாங்கள் செல்லும் பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான்” (முரசொலி, 2.12.2018).
“திராவிடர் கழகம் நேற்றைக்கும், இன்றைக்கும், நாளைக்கும் எங்களுக்கு வழிகாட்டும்தான்”
– தஞ்சாவூர் திராவிடர் கழக மாநில மாநாட்டில் (24.2.2019) தி.மு.க. செயல் தலைவராகப் பிரகடனப் படுத்தினாரே!
“திராவிடர் கழகப் பவள விழா மாநாடு நமக்கும் பயிற்சிக் களம்” (முரசொலி, 27.8.2019) என்றாரே!
இதற்குப் பெயர் தான் தி.மு.க.வின் அடிவருடி வீரமணி என்று பெயரா? சுயமரியாதை இயக்கம் – திராவிட இயக்கம். இங்கு அடிவருடல் அரைப் புள்ளிக்கும் இடமில்லை.
எந்த அளவுக்கு துக்ளக் சென்றுள்ளது தெரியுமா?

தி.மு.க.வின் வரலாற்றை திராவிட இயக்க ஆய் வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு அவர்கள் பல தொகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார். அதனை தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் என்பதை வைத்துக் கெண்டு தி.மு.க.வின் கொள்கை களை நினைவூட்டும் தி.மு.க.வின் சரித்திரத்தை வெளி யிட வேண்டிய அவசியமென்ன என்று கேள்வி கேட் கிறார் திருவாளர் குருமூர்த்தி (துக்ளக், 5.7.2017 பக். 12,13).
தி.மு.க. சரித்திரத்தை எழுதலாமா, கூடாதா என்ற அதிகாரத்தை அய்யர்வாளுக்குக் கொடுத்தது யார்?
தி.மு.க. வரலாற்றை எழுதி விட்டால் ஆரிய ஆதிக்க எதிர்ப்பு பார்ப்பனீயத்தின் பாசிச குரூர புத்தி கள், செயல்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்துவிடுமே! அடுத்த தலைமுறை இளைஞர்களும் கொள்கை ஆயுதமாக கையில் எடுத்துக் கொள்வார்களே – அந்த அச்சம் அவர்களை உலுக்குகிறது – அதைத் தடுக்கும் நயவஞ்சக எழுத்துதான் – ஆரியத்திற்கே உரித்தான அக்மார்க் நயவஞ்சகம்.

No comments:

Post a Comment