
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.02.2024) தூத்துக்குடி மாவட்டம், சிப்காட்- சில்லாநத்தம் தொழிற்பூங்காவில், வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் (VinFast Auto Limited)-இன் மின் வாகன உற்பத்தி (EV manufacturing)ஆலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இந்த ஆலை, முதற்கட்டமாக 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் 3,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த மின்வாகன உற்பத்தி ஆலையாக அமைக்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூகநலம் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதாஜீவன், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பால்வளத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் சி.சண்முகையா, ஜி.வி. மார்க்கண்டேயன், ஊர்வசி செ.அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர்பெ. ஜெகன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைச் செயலாளர் வி. அருண் ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு, சிப்காட் மேலாண்மை இயக்குநர் டாக்டர் கே. செந்தில்ராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. லட்சுமிபதி, வின்ஃபாஸ்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் பாம் சான்ஹ் சவு, துணை தலைமைச் செயல் அலுவலர்கள் ஹோங் காங் தாங், நுகென் டாங் குவாங் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment