தாம்பரம், கோவை மாநகராட்சியில் ரூ.95 கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு நிர்வாக அனுமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 27, 2024

தாம்பரம், கோவை மாநகராட்சியில் ரூ.95 கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு நிர்வாக அனுமதி

featured image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை,பிப்.27- தூய்மை இந்தியா திட் டத்தில், தாம்பரம்- ஆப் பூர், கோயம்புத்தூர்- வெள்ளலூர் குப்பைக் கிடங்குகளில் உள்ள திடக்கழிவுகளை உயிரி அகழாய்வு முறையில் அகற்ற ரூ.94.53 கோடியிலான திட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிட்டுள் ளார்.
இதுகுறித்து, நக ராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகே யன் வெளியிட்ட செய் திக் குறிப்பு:

2021 அக்டோபர் 1ஆம் தேதி தூய்மை இந்தியா திட்டம்(நகர்ப்புறம்) 2.0 தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து நகரங்களை யும் தூய்மையாகவும் மற்றும் குப்பைகள் இல் லாத நகரங்களாகவும், திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நகரங்களா கவும் மாற்றும்வகையில் இத்திட்டம் செயல்படுத் தப்படுகிறது.
மேலும் இத்திட்டத் தின் மூலம் 100 சதவீதம் திடக்கழிவுகளை அறிவியல் முறையில் தீர்வு செய்தல், உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்தல், கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவு களை திறம்பட மேலாண்மை செய்தல், நெகிழி கழிவு மேலாண்மை மற்றும் அனைத்து தேக் கத்திடக் கழிவுகள் கொட் டும் இடங்களையும் சரி செய்வதே இத்திட்டத் தின் முதன்மை நோக்க மாகும்.

பத்து ஆண்டுகளுக்கு மேல் தேங்கியுள்ள திடக் கழிவுகளை உயிரியல் அகழ்ந்தெடுத்தல் (Bio-mining) முறையில், சுற்றுச்சூழலுக்கு இணக்கமான வகையில் முழுமையாக அகற்ற நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீட்டெடுக்கப் பட்ட நிலத்தின் ஒரு பகு தியை நிலத்தின் தன்மைக் கேற்ப நகர்வனங்களா கவோ, பூங்காக்களா கவோ மாற்ற அரசு உறுதி பூண் டுள்ளது.
தாம்பரம் மாநகராட் சியில் ஆப்பூர் குப்பை கிடங்கில் 10 ஆண்டு களுக்கும் மேலுள்ள பழைய தேக்கத்திட கழிவு களை ரூ.35.99 கோடி மதிப்பீட்டிலும் கோயம் புத்தூர் மாநகராட்சி வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பத்தாண்டு களுக்கு மேலுள்ள பழைய திட கழிவுகளை ரூ.58.54 கோடி மதிப் பீட்டிலும் உயிரி அக ழாய்வு முறையில்அகற்ற மொத்தம் ரூ.94.53 கோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் நிர்வாகஅனுமதி வழங்கி உத்தரவிட்டு உள் ளார்.
இந்த திட்டங்களை செயல்படுத்துவதால் தாம்பரம் மற்றும் கோயம்புத்தூர் மாநக ராட்சிகளை தூய்மை யாகவும், குப்பை இல்லா நகரமாகவும் மாற்றலாம்.
இதன்மூலம் பசுமை வெளிகள், பூங்காக்கள், அந் நகர மக்கள் ஆரோக்கிய மாக வாழ்வதற்கான வாய்ப் புகளை மேம்படுத்தவும் வழிவகுக்கும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment