சென்னை, பிப். 26 ஒரு குவிண் டால் கரும்புக்கு ரூ. 24 மட்டுமே விலையை உயர்த்தி 5 கோடி கரும்பு விவசாயிகளை மோடி அரசு வஞ்சித்துள்ள தாக தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
9.5 சதவீதம் பிழிதிறன் கொண்ட ஒரு குவிண்டால் கரும்புக்கு 2024_20-25 ஆண்டுக்கு ரூ. 315-ஆம், 10.25 சதவீதம் பிழிதிறன் கொண்ட கரும்புக்கு ரூ. 340-ஆம் எப்ஆர்பி (FRP) விலையை ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஒன்றிய அரசு அறிவித்துள்ள கரும்பு விலை எப்ஆர்பி (FRP) டன்னுக்கு ரூ. 3150-ம், மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகை ரூ. 215 ம் சேர்த்து தமிழ்நாட்டில் டன்னுக்கு ரூ. 3365 விலையை அடுத்த ஆண்டு அரவை பருவத் திற்கு சர்க்கரை ஆலைகள் வழங்கும்.
கரும்பு உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது
சாமிநாதன் குழு பரிந்துரைப் படி உற்பத்திச் செலவுடன் அய்ம்பது சதவீதம் கூடுதலாக சேர்த்து 9.5 சதவீதம் பிழிதிறன் கொண்ட ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ. 500 விலை வழங்க வேண்டும் என்ற கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஒன்றிய பாஜக அரசு நிராகரித்து, சர்க் கரைத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் பெரும் நிறுவ னங்களுக்கு ஆதரவாக செயல்பட் டுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 9 சதவீதம் பிழிதிறன் கரும்புக்கு விலை அறிவித்து வந்ததை 10.25 சதவீதம் பிழிதிறனுக்கு என உயர்த்தினர்.
எத்தனால், மின்சாரம் உள் ளிட்ட கரும்பு உப உற்பத்தி பொருட்களின் லாபத்தில் விவ சாயிகளுக்கு பங்கு தர மறுக் கின்றனர்.
கரும்பு கட்டுப்பாடு சட்டத் தில் உள்ள சரத்துக்களை ஒவ் வொன்றாக நீர்த்துப்போக செய்கின்றனர்.
ரங்கராஜன் குழு பரிந் துரைப்படி வருவாய் பங்கீட்டு முறையை படிப் படியாக அமல்படுத்த முயற்சிக் கின்றனர்.
2019_20-20 இல் 9 சதவீதம் பிழிதிறனுக்கு விலை அறிவித்து வந்ததை 10.25 சதவீதம் பிழிதிறனாக உயர்த் தினர்.
கரும்பு உற்பத்திச் செலவு உயர்ந்துள்ள நிலையில் பாஜக ஒன்றிய அரசு ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ.24 விலை உயர்த்தி அய்ந்து கோடி கரும்பு விவசாயிகளை வஞ்சித் துள்ளது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment