கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்! பிப்.26 இல் அறிஞர் அண்ணா - கலைஞர் ஆகியோர் நினைவிடங்களில் தாய்க்கழகம் வீர வணக்கம்! - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 24, 2024

கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்! பிப்.26 இல் அறிஞர் அண்ணா - கலைஞர் ஆகியோர் நினைவிடங்களில் தாய்க்கழகம் வீர வணக்கம்!

3-44

திராவிடர் இயக்கத்தின் ஒப்பற்ற முதலமைச்சராகி ஓராண்டு காலத்தில் முப்பெரும் சாதனைகளைச் செய்த அறிஞர் அண்ணா, அவர் உருவாக்கிய ஆட்சியையும், இயக்கத்தையும் கட்டிக் காத்த முத்தமிழறிஞர் முதலமைச்சர் கலைஞர் நினைவிடங்களை மிக அருமையாகப் புதுப்பித்தும், கலைஞரின் விருப்பத்தை சட்டப் போராட்டத்தின்மூலம் நிறைவேற்றி, ஒரு கொள்கை வெற்றியை நிலைநாட்டிய அவரது ஆட்சியின் மாட்சியின் தொடர்ச்சியாக இந்தியாவே வியக்கும் ஆட்சியை நடத்தும் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைத்துள்ள அந்நினைவிடங்களை 26-2-2024 அன்று மாலை 7 மணிக்குத் தொடங்கி வைக்கிறார்.
சென்னை கடற்கரையில் அமைந்துள்ள அந்நினைவிடங்களில் தாய்க்கழகமாம் நமது திராவிடர் கழகம் சார்பில், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், மலர்வளையம் வைத்து வீர வணக்கத்தைச் செலுத்த அனைத்துக் கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர்கள் கருஞ்சட்டையோடு திரண்டு வர வேண்டுகிறோம்.

கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்

No comments:

Post a Comment