தமிழர் தலைவர் பங்கேற்ற மதுரை, உசிலம்பட்டி,மேலூர் மாவட்டக்கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
மதுரை, பிப். 7- மதுரை, உசிலம் பட்டி, மேலூர் மாவட்ட திரா விடர் கழக கலந்துரையாடல் கூட்டம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலை மையில் 4.2.2024 ஞாயிற்றுக் கிழமை மாலை ஆறு மணிக்கு மதுரை ஆர்த்தி ஓட்டல் கூட்ட அரங்கில் சிறப்பாக நடை பெற்றது.
உசிலம்பட்டி மாவட்ட மாணவர் கழக செயலாளர். பா.வெங்கடேசன் கடவுள் மறுப்புக் கூறினார்.
தலைமைக்கழக அமைப் பாளர் வே.செல்வம் சுயமரியா தைச் சுடரொளி, முன்னாள் திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர் களின் மறைவுக்கு இரங்கல் தீர் மானம் உள்ளிட்ட தீர்மானங் களை முன்மொழிந்தார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார். கடலூரில் நடைபெற்ற தலை மைச்செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள் பற்றியும் அதனை நிறைவேற்றிட கழகப்பொறுப் பாளர்கள் தீவிரமாகப் பணி யாற்ற வேண்டும் என்றும் தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளின் இடையறாத உழைப்பு பற்றியும் அதனால் நமக்கு கிடைத்திருக்கும் வெற்றிக ளையும் மகிழ்ச்சியையும் குறிப் பிட்டுப் பேசினார்.
தமிழர் தலைவர் தமது உரை யில்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணியை வெற்றிபெறச்செய்ய அனைத்து வகையிலும் பிரச்சாரத்தை நடத்தவேண்டும். அதற்கு விடுதலை ஏட்டைப் பரப்பு வதில் முழுமுயற்சியில் ஈடுபட வேண்டும் எனக்கேட்டு கொண்டார்
நிகழ்வில் கழகக் காப்பா ளர்கள் தே.எடிசன்ராசா,சே.முனியசாமி,மதுரை மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வா.நேரு, செயலாளர் பாவலர் சுப.முரு கானந்தம்,மதுரை மாவட்டச் செயலாளர் லீ.சுரேசு,பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் பேரா.சி.மகேந்திரன், க.அழகர் ,மகளிரணி இராக்கு, பாக்கியம், கலைச்செல்வி, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் பால் ராசு, மாணவரணி தேவராஜ் பாண்டியன்,மேலூர் மாவட் டத் தலைவர் வீரமணி, செய லாளர் பாலா,உசிலம்பட்டி மாவட்டத்தலைவர் எரிமலை, செயலாளர் முத்துக்கருப்பன், மாநில வழக்கறிஞர் அணிச் செயலாளர் சித்தார்த்தன், துணைச்செயலாளர் கணேசன் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர்.
இளைஞரணி மாணவர ணிக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1) திராவிடர் கழகச் செயல வைத் தலைவர் சுயமரியா தைச் சுடரொளி கடலூர் சு.அறிவு கரசு அவர்களின் மறை வுக்கு இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத் தையும் தெரிவித்துக் கொள் கிறது.
2) திராவிடர் கழகச் செய லவைத் தலைவராக தமிழர் தலைவர் அவர்களால் நியமிக் கப்பட்டுள்ள வழக்குரைஞர் வீரமர்த்தினி அவர்களுக்கு இக்கூட்டம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
3) 3. 2. 2024 அன்று கடலூ ரில் நடைபெற்ற தலைமைச் செயற்குழுவின் தீர்மானங் களை ஏற்று செயல்படுத்துவது எனத் தீர்மானிக்கிறது.
4) 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன் னேற்ற கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள இந்தியா கூட் டணி வெற்றி பெற அனைத்து வகையிலும் பரப்புரையில் ஈடுபடுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
5) உலகின் ஒரே பகுத்தறிவு ஏடான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு ,தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆகிய இதழ் களுக்கு சந்தாக்கள் சேர்ப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள் ளது
6) மதுரை கரிமேடு பகுதி யில் உள்ள தந்தை பெரியார் சிலை சிதைந்த நிலையில் உள்ளதை மாற்றி புதிய மார்பளவு சிலையை வைக்க மாநகராட்சியிடம் அனுமதி யைக் கோருவது என முடிவு செய்யப்படுகிறது
நிறைவாக திராவிடர் கழக மதுரை மாநகர் மாவட்டத் துணைத் தலைவர் அனுப்பா னடி பவுன்ராசா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment