சென்னை,பிப்.1- சென்னை அடுத்த பரங்கிமலையில் ரூ.200 கோடி மதிப்புடைய 50 சென்ட் அரசு நிலம் மீட்கப்பட்டது. செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவின்படி வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் ஆக்கிர மிப்புகளை அகற்ற பல்லாவரம் வட்டாட்சியர் ஆறு முகம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதுவரை பரங்கிமலை பகுதிகளில் குத்தகை காலம் முடிந்தும் ஒப்படைக்காமல் இருந்த சுமார் ரூ.2.500 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டது. சென்னை புற நகரில் குத்தகை காலம் முடிந்தும் ஒப்படைக்கப்படாமல் உள்ள அரசு நிலத்தை மீட்கும் பணி தொடரும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment