சிங்காரவேலரின் நூலார்வம் ரஷ்யாவில் சிங்காரவேலர் பெயரில் நூலகம்
சிங்காரவேலர் தனக்கு வேண்டிய நூல்களை ஆக்ஸ்வேட் பிரஸ், மாக்மில்லன், ஹிக்கின்பாதம், பிரிட்டீஷ், அமெரிக்க புகழ்பெற்ற புத்தகக் கம்பெனிகள் ஆகியவற்றிலிருந்து கடல் வழியாகத் தருவித்துப் படித்து வந்தவர். தன் வாழ்நாளின் இறுதிவரை புத்தகங்களின் மீது பேரார்வமாக இருந்தார் என்பது அவரோடு அணுக்கமாக இருந்த தமிழ்நாட்டுத் தலைவர் களின் கூற்றாக உள்ளது. இலண்டன், நியூ யார்க்கைச் சேர்ந்த புத்தகப் பதிப்பாளர்கள் தங் களது ‘விண்டர்’ – ஆட்டம் புத்தகப் பட்டியலைச் சிங்கார வேலருக்கு அனுப்பிவைப்பர்கள். அதிலிருந்து தனக்கு வேண்டிய புத்தகங்களைத் தேர்வு செய்து கொள்வார். அன்று பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட பொதுவுடைமைச் சித்தாந்த நூல்கள்கூட கப்பல்கள் மூலம் புதுவை வழியாக வரவழைக்கப்பட்டன என்பது உண்மை.
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களான சேக்ஸ்பியர், ஹீம், மில்டன், ப்ராய்டு, ரசல், அய்ஸ் போன்றோர் படைப்புகள். மேலும் ஹெர்பர்ட் ஸ்பென்சன், காம்பேர், தாந்தே, கான்ட் ஹெகல், லியோ டால்ஸ்டாய், ஹெல்லர், ஏல்லீஸ் போன்ற தத்துவவாதிகளின் நூல்களையும், தஸ்தயேவ்ஸ்கி நாவல்கள், புஷ்கின் கவிதைகள், செக்காவ் நாட கங்கள், அமெரிக்க ஆசிரியர்களான மார்க்டிபைக், வால்ட் விட்மன், அப்டான் சிஸ்பர் ஆகியோரின் புத்தகங்கள் யாவற்றையும் தம் நூலகத்தில் சேகரித்து வைத்திருந்தார். இவர் தாய்மொழியான தமிழுடன் தெலுங்கை எழுதப் படிக்கவும் கற்றிருந்தார். மேலை நாட்டு மொழிகளான ஆங்கிலம், ஜெர்மன், ரஷ்யன், ஃபிரெஞ்சு ஆகிய மொழிகளைக் கற்றதனால்தான் உலக அளவில் உள்ள எழுத்துகளை, படைப்புகளை வாசித்துக் கொண்டே இருக்க முடிந்தது. தென்னிந்தியாவிலே தனிநபர் நூலகங்களில் மிகப் பெரிய நூலகம் சிங் காரவேலர் வீட்டு நூலகமாகும். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைத் தொகுத்து வைத்திருந்தார். அந்நூலகத்திற்கு “மார்க்சிஸ்டு லெனினிஸ்டு ‘ என்று பெயர். இவற்றில் ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் பொதுவுடைமை சார்ந்த நூல்களாகும். சிங்காரவேலர் சேகரித்த நூல்களில் ஒரு பகுதி ரஷ்யாவிலுள்ள பெரிய நூலகமான லெனின் நூலகத்தில் “சிங்காரவேலர் நூலகம்” என்ற பிரிவில் இன்றும் உள்ளது.
அவருடைய நூலகம் தலைவர்கள் பலரின் சிந்தனை மாறுதலுக்கு உந்து கோலாயிற்று. பொதுவுடைமை இயக்க வரலாற்றில் அறியப்பட்ட எம்.என். ராய், இ.எம்.எஸ். நம்பூரிபாட் போன்றோர் அந்நூலகத்தைப் பயன்படுத்தியுள்ளனர். தமிழ் நாட்டில் அறிஞர் அண்ணா, ப. ஜீவானந்தம், மகாகவி பாரதி, குத்தூசி குருசாமி, எ.எஸ்.கே. அய்யங்கார், புதுச்சேரி வ. சுப்பையா, எம்.பி.எஸ் வேலாயுதம், எஸ்.வி. காட்டே போன்றோரும் அடங்குவர்.
குறிப்பாக அறிஞர் அண்ணா, ப. ஜீவானந்தம் போன்றவர்கள் அந்நூலகத்தின் மேன்மையை அறிந்து கொண்டு, அந்நூலகத்தில் பல மணி நேரங்கள் படிப்பதிலே செலவிட்டனர் எனப் பதிவு செய்துள்ளனர். மாமேதை தள்ளாத வய திலும் விழிகள் சோர்ந்திருந்த போதும் படிப்ப திலேயே பலமணி நேரங்களைச் செலவழித் துள்ளார். முக்கியமான முற்போக்கு இதழ்களை புத்தக விற்பனையாளரிடமிருந்து நேரடியாக வாங்குவார்.
வாங்கிய உடனே மணிக்கணக்கில் அமர்ந்து படித்து விடுவார். அந்நூல்களை விரும்பி பேரார் வத்துடன் படிக்கும் எவர்க்கும் தம் நூலகத்திலே இருந்து அங்கேயே படிக்கத் தருவார். அவரது நூலகத்திலிருந்து எவரும் புத்த கங்களை எடுத்துச் செல்ல ஒருபோதும் விரும் பியதில்லை. கருத்தில் நேர்மையற்றவர்கள் எனக் கருதியவர்களிடத்தில் சில வார்த்தைகளே பேசுவார். ஆனால், பேசும் பொருளில் அக்கறையுள்ளவர்களிடத்து மணிக் கணக்கில் உரையாடுவார். அவருடைய நூலகத் தில் முற்போக்கு இதழ்கள் மட்டுமல்ல, பண்டைய தமிழ் இலக்கியத்தின் எல்லாச் சிறந்த நூல்களும் அவரிடமிருந் தன. நூலகமே அவருடைய வாழ்வு, நூல்களே அவரின் சுவாசமாக இருந்ததில் எவ்வித வியப்பும் இல்லை.
குடிஅரசில்…
சிங்காரவேலர் தந்தை பெரியாருக்காக குடிஅரசில் கட்டுரைகள் எழுதினார்.
1931-ஆம் ஆண்டு பெரியார் ஓராண்டு உலகப் பயணம் மேற்கொண்ட பொழுது, தான் வரும்வரை தனது குடிஅரசு ஏட்டிற்கு சிங்காரவேலர் கட்டுரைகள் எழுதி வழிகாட்ட வேண்டுமென கேட்டுக் கொண்டார். அதையேற்று சிங்காரவேலர்,
‘கடவுளும் பிரபஞ்சமும்’
‘கடவுள் என்ற பதமும், அதன் பயனும்’
‘மனிதனும் பிரபஞ்சமும்’
‘பிரபஞ்சப் பிரச்சினைகள்’
‘மெய்ஞான முறையில் மூட நம்பிக்கைகள்’
‘மூட நம்பிக்கைகளின் கொடுமை’
‘பகுத்தறிவு என்றால் என்ன?’
போன்ற கட்டுரைகளை எழுதினார்.
No comments:
Post a Comment