இந்தியா (I.N.D.I.A)கூட்டணியின் வெற்றி காலத்தின் கட்டாயம் சிறப்புக் கூட்டம்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி,
பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை
சென்னை,ஜன.23- “இந்தியா” கூட்டணியின் வெற்றி காலத்தின் கட்டாயம் எனும் தலைப்பில் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் நேற்று (22.1.2024) மாலை சென்னை பெரியார் திடல் நடிக வேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.
சிறப்புக்கூட்டத்தின் தொடக் கத்தில் இரங்கல் தீர்மானத்தை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் முன் மொழிந்து வாசித்தார்.
திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அனைவரும் எழுந்து நின்று அமைதி காத்தனர்.
தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம் அனைவரையும் வரவேற்றார்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழக செயல வைத் தலைவர் சு.அறிவுக்கரசு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சு.அறிவுக்கரசு அவர்களின் தந்தை யாரும், நீதிக்கட்சியின் பொறுப் பாளருமான சுப்பிரமணியம் அவர்களுடனும், அவர்தம் குடும் பத்தினருடனும் கடலூரில் தம் முடைய இளமைக்கால தொடர் புகளை நினைவுபடுத்தி நெகிழ்ச்சி யுரை ஆற்றினார்.
சிறப்புக்கூட்டத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரையைத் தொடர்ந்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்பு நிறை வுரையாற்றினார்.
தலைவர்கள் சிறப்புரையில் ஒன்றிய பாஜக அரசின் அரச மைப்புச் சட்ட விரோத நடவடிக் கைகள், மாநிலங்களின் உரிமை பறிப்புகள், நீட் திணிப்புமூலம் கல்வி உரிமை பறிப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு, இப்படி ஒரே வரி, ஒரே கல்வி, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்று எல்லா வற்றிலும் திணித்து பன்முகத் தன்மையை சிதைக்கின்ற மக்கள் விரோத நடவடிக்கைகள் உள் ளிட்ட வற்றை விளக்கி, அரச மைப்புச் சட்டத்துக்கு மாற்றாக மனு தர்மத்தை கொண்டு வரத் துடிக்கும், ஆர்.எஸ்.எஸ். தத்துவங் களை செயல் படுத்தத்துடிக்கின்ற ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க., சங் பரி வாரங்களுக்கு வரும் 2024 தேர்த லில் தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும்.
“இந்தியா கூட்டணி வெற்றி என்பது காலத்தின் கட்டாயம்” என்று பல்வேறு ஆதார பூர்வமான தகவல்களை எடுத்துக் காட்டி உரையாற்றினார்கள்.
நூல் வெளியீடு
பரகால பிரபாகரின் “The Crooked Timber of New India” நூலின் தமிழ் மொழியாக்கமான “புதிய இந்தியா எனும் கோணல் மரம்” நூல்
(மொழி பெயர்ப்பு: ஆர்.விஜய சங்கர்)
சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் வெளியிடப்பட்டது.
தலைமைக் கழக அமைப் பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டனர்.
அவர்களைத் தொடர்ந்து கழகத் தோழர்கள் உள் பட பலரும் வரிசையில் சென்று தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களிடமிருந்து புத்தகத்தைப் பெற்றுக் கொண்டனர்.
ரூ. 400 மதிப்புள்ள அப்புத்தகம் சிறப்புக் கூட்டத்தில் ரூ.350க்கு அளிக் கப்பட்டது.
ஆ.வீரமர்த்தினி, கரிகாலன்,இரா.தமிழ்செல்வன், ஆ.வெங்க டேசன், தாம்பரம் ப.முத்தையன், கொடுங்கையூர் தங்க.தனலட்சுமி, செ.பெ.தொண்டறம், பசும்பொன், அண்ணாதுரை, த.கு.திவாகரன், கவிஞர் கண்மதியன், மு.இரா.மாணிக் கம், க.கலைமணி உள்பட பலரும் புத்தகத்தை பெற்றுக் கொண்டனர்.
துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.
பங்கு பெற்றோர்
கழக வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, பகுத்தறிவு எழுத் தாளர் மன்றத் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், வெ.மு.மோகன், தாம்பரம் சு.மோகன்ராஜ், செ.ர.பார்த்தசாரதி, இளைஞரணி மாநில துணை செயலாளர் சோ.சுரேஷ், உடுமலை வடிவேல், கோ.வீ.ராகவன், மயிலை டி.ஆர்.சேதுராமன், கொடுங்கையூர் கோ.தங்கமணி, பாலு, ஜனார்த் தனன், சி.வெற்றிசெல்வி, பூவை செல்வி, வெண்ணிலா, மு.பவானி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்ட முடிவில் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment